Home
Mobile

மார்க்கெட்டே அதிர போகுது.. 50எம்பி கேமரா.. 44W சார்ஜிங்.. புதிய Vivo 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் அடுத்து விவோ வி40 லைட் (Vivo V40 Lite) எனும் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போன் உலக சந்தை மற்றும் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. ட்ரிபிள் ரியர் கேமரா, ஸ்னாப்டிராகன் சிப்செட், ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

விவோ வி40 லைட் அம்சங்கள் (Vivo V40 Lite specifications): இந்த போனின் வலது பக்கத்தில் வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன்கள் உள்ளன. மேலும் ​​டிரிபிள் கேமரா சென்சார்கள் மற்றும் ஆரா ஸ்மார்ட் லைட் ஆதரவும் இந்த போனில் உள்ளன. ஒயிட் மற்றும் மெரூன் நிறங்களில் இந்த விவோ வி40 லைட் போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்க்கெட்டே அதிர போகுது..  புதிய Vivo 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?

6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த விவோ வி40 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் 2400X1080 பிக்சல்ஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட் (Qualcomm Snapdragon 6 Gen 1)வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய விவோ போன். குறிப்பாக கேமிங் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த போன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ஃபன்டச் ஓஎஸ் (Funtouch OS) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டு இந்த புதிய போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

OIS ஆதரவு கொண்ட 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது விவோ வி40 லைட். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டு வெளிவரும் இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ வி40 லைட் ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

மார்க்கெட்டே அதிர போகுது..  புதிய Vivo 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?

5500எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ வி40 லைட் ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (44W fast charging) வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனின் பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ( in-display fingerprint sensor) ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ வி40 லைட் ஸ்மார்ட்போன். பின்பு IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய விவோ போன். அதேபோல் 5ஜி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. மேலும் ரூ.35,000 பட்ஜெட்டில் இந்த விவோ வி40 லைட் போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

photo courtesy:91mobiles

Best Mobiles in India

English summary
Vivo V40 Lite global variant specifications and price released: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X