Home
Mobile

யாருமே எதிர்பார்க்கல.. AMOLED டிஸ்பிளே.. சோனி கேமரா.. புதிய Vivo 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் தனது புதிய விவோ வி40 லைட் 5ஜி (Vivo V40 Lite 5G) ஸ்மார்ட்போனை இந்தோனேசியாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இப்போது விவோ வி40 லைட் 5ஜி போனின் விலை மற்றும் அம்சங்களை இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம்.

விவோ வி40 லைட் 5ஜி அம்சங்கள் (Vivo V40 Lite 5G Specifications): 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன் இந்த விவோ வி40 லைட் 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1,080 x 2,400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1800 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

யாருமே எதிர்பார்க்கல.. புதிய Vivo 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?

சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 (Snapdragon 4 Gen 2) சிப்செட் உடன் விவோ வி40 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் OriginOS 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 மூலம் இயங்குகிறது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.

50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் விவோ வி40 லைட் 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விவோ வி40 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. கார்பன் பிளாக் மற்றும் டைட்டானியம் சில்வர் நிறங்களில் இந்த போனை வாங்கலாம்.

5000mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது விவோ வி40 லைட் 5ஜி போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ போன். மேலும் இதில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், IP64 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) வசதிகள் உள்ளன.

யாருமே எதிர்பார்க்கல.. புதிய Vivo 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?

5ஜி, வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், ஒடிஜி, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த விவோ வி40 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன. குறிப்பாக இந்த விவோ வி40 லைட் 5ஜி போனின் ஆரம்ப விலை IDR 4,299,000 (இந்திய மதிப்பில் ரூ.23,700)-ஆக உள்ளது. அதேபோல் விவோ வி40 லைட் 5ஜி உடன் விவோ வி40 லைட் 4ஜி மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி ஸ்னாப்டிராகன் 685 சிப்செட், 8ஜிபி ரேம், 256ஜிபி மெமரி, 50எம்பி டூயல் ரியர் கேமராக்கள், 32எம்பி செல்பி கேமரா, அமோலெட் டிஸ்பிளே உள்ளிட்ட பல அம்சங்களுடன் விவோ வி40 லைட் 4ஜி (Vivo V40 Lite 4G) ஸ்மார்ட்போன் ஆனது IDR 3,599,000 (இந்திய மதிப்பில் ரூ.19,900) விலையில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Vivo V40 Lite 5G launched in Indonesia: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X