Home
Mobile

தூள் கிளப்பும் விவோ.. 80W சார்ஜிங்.. 50எம்பி கேமரா.. 256ஜிபி மெமரி.. Aura light.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் அடுத்து விவோ வி40 (Vivo V40) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போன் முதலில் ஐரோப்பாவில் அறிமுகமாகும் என்றும், அதன்பின்பு தான் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. தனித்துவமான கேமரா வடிவமைப்பு, ஸ்மார்ட் ஆரா லைட் மற்றும் பல சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

விவோ வி40 அம்சங்கள் (Vivo V40 specifications): 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே ( FHD+ AMOLED display) உடன் அறிமுகம் செய்யப்படும் விவோ வி40. பின்பு 2400X1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.

தூள் கிளப்பும் விவோ.. 80W சார்ஜிங்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

அதேபோல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 (Qualcomm Snapdragon 7 Gen 3) சிப்செட் வசதியுடன் விவோ 40 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். எனவே கேமிங் ஆப்ஸ், வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் போன்ற பல்வேறு ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

விவோ 40 ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் கேமரா செட்டப் கொண்டுள்ளது. மேலும் இதில் ஸ்மார்ட் ஆரா லைட் (smart Aura light) ஆதரவும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் எனறே 50எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் விவோ வி40 போன் ஆனது ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

5500எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ 40 ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ( 80W fast charging) வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். பர்பிள், கிரே, சில்வர் நிறங்களில் இந்த போன் விற்பனைக்கு வரும்.

தூள் கிளப்பும் விவோ.. 80W சார்ஜிங்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

டூயல்-சிம் (dual-SIM), வைஃபை (Wi-Fi), புளூடூத் (Bluetooth), என்எப்சி (NFC), ஜிபிஎஸ் (GPS), யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C port)உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் விவோ 40 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். பின்பு IP54 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistance) உடன் இந்த புதிய விவோ போன் அறிமுகம் செய்யப்படும்.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியுடன் விவோ வி40 போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது. அதேபோல் இந்த புதிய விவோ போன் ஆனது ரூ.30,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

Photo courtesy: 91mobiles

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo V40 design, specifications leaked online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X