ஆர்டர் தூள் பறக்க போகுது.. சோனி கேமரா.. 80W சார்ஜிங்.. அறிமுகமானது Vivo போன்கள்.. என்ன விலை?
இந்தியாவில் விவோ வி40 (vivo v40) மற்றும் விவோ வி40 ப்ரோ (vivo v40 pro) ஸ்மார்ட்போன்கள் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த போன்கள் அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய போன்களின் விலை மற்றும் அம்சங்களை விரிவாகப் பாரிக்கலாம்.
விவோ வி40 அம்சங்கள்(vivo V40 specifications): 6.78-இன்ச் 1.5கே அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) உடன் வெளிவந்துள்ளது இந்த போன். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 480 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், எச்டிஆர் 10 பிளஸ் உள்ளிட்ட பல அம்சங்களைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் மற்றும் அட்ரினோ 720 ஜிபியு(Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அதேபோல் ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த போனில் உள்ளது.
ZEISS optics சென்சார் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அதன்படி 50எம்பி ISOCELL GNJ கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் 50எம்பி ஆட்டோ ஃபோகஸ் செல்பி கேமராவும் இதில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் கேமரா 4கே வீடியோ பதிவு செய்யும்.
யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) ஆதரவுகளும் கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ வி40 போன். மேலும் இந்த போனில் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) வருகிறது.
5000எம்ஏஎச் பேட்டரி, 80W சார்ஜிங், 5ஜி எஸ்ஏஃஎன்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11பிஇ, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), கலிலியோ (GALILEO), யுஎஸ்பி டைப்-சி 2.0 உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போனின் எடை 190 கிராம் ஆகும்.
விவோ வி40 ப்ரோ அம்சங்கள்(vivo V40 Pro specifications): 6.78-இன்ச் 1.5கே அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) உடன் வெளிவந்துள்ளது இந்த போன். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 480 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், எச்டிஆர் 10 பிளஸ் உள்ளிட்ட பல அம்சங்களைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.
ஆக்டோ-கோர் டைமன்சிட்டி 9200 பிளஸ் 4என்எம் சிப்செட் மற்றும் இம்மார்டலிஸ்-ஜி715 ஜிபியு (Immortalis-G715 GPU)கிராபிக்ஸ் கார்டு உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அதேபோல் ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்( In-display Fingerprint Sensor) வசதி இந்த போனில் உள்ளது.
50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்921 சென்சார் (SONY IMX921 sensor) + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி ஏஎப் சோனி ஐஎம்எக்ஸ்816 2எக்ஸ் (Sony IMX816 2x) டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் 50எம்பி ஆட்டோ ஃபோகஸ் செல்பி கேமராவும் இதில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் கேமரா 4கே வீடியோ பதிவு செய்யும்.
யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) ஆதரவுகளும் கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ வி40 ப்ரோ போன். மேலும் இந்த போனில் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) வருகிறது.
5000mAh பேட்டரி, 80W சார்ஜிங், 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11பிஇ, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), கலிலியோ (GALILEO),யுஎஸ்பி டைப்-சி 2.0 உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போனின் எடை 190 கிராம் ஆகும்.

விலை: 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட விவோ வி40 போனின் விலை ரூ.34,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.36,999 விலையிலும், 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.41,999-ஆக உள்ளது. டைட்டானியம் கிரே, லோட்டஸ் பர்பிள், Ganges Blue நிறங்களில் இந்த போன் விற்பனைக்கு வரும்.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட விவோ வி40 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.49,999-ஆக உள்ளது. 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.59,999-ஆக உள்ளது. டைட்டானியம் கிரே மற்றும் Ganges Blue நிறங்களில் இந்த போன் விற்பனைக்கு வரும். இந்த போன்களின் முன்பதிவு இன்று தொடங்குகிறது. வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் விவோ.காம் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் இந்த போன்கள் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications








