Home
Mobile

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. 3D டிஸ்பிளே.. ZEISS கேமரா.. 5500mAh பேட்டரி.. 80W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, ஜீஸ் ஆப்டிக்ஸ் கேமரா சிஸ்டம், 5500mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களை கொண்ட விவோ வி40 5ஜி (Vivo V40 5G) போனுக்கு பட்டையை கிளப்பும் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. குரோமா விற்பனையில் (Croma Sale) கிடைக்கும் இந்த போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

விவோ வி40 5ஜி குரோமா விற்பனை (Vivo V40 5G Croma Sale): இந்த விவோ போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.34,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.36,999ஆகவும் இருக்கிறது. இப்போது, குரோமா விற்பனையில் 128 ஜிபி மெமரி வேரியண்ட்டுக்கு ரூ.2000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. 3D டிஸ்பிளே.. ZEISS கேமரா.. 5500mAh பேட்டரி!

இந்த டிஸ்கவுண்ட்டானது ஐடிஎப்சி (IDFC), யெஸ் (YES), ஒன்கார்டு (Onecard), எச்எஸ்பிசி (HSBC) ஆகிய கிரெடிட் கார்டுகளுக்கு கிடைக்கிறது. இதே கார்டுகளை பயன்படுத்தி ஈஎம்ஐ ஆப்ஷனில் வாங்கினால், 6 மாதங்களுக்கா நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகை கிடைக்கிறது. ஆகவே, இந்த விவோ வி40 5ஜி போனை ரூ.32,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

7.58 எம்எம் தடிமனில் அல்ட்ரா ஸ்லிம் லுக் கொடுக்கும் இந்த விவோ மாடலை டைட்டானியம் கிரே (Titanium Grey), லோட்டஸ் பர்பிள் (Lotus Purple) மற்றும் கேங்ஸ் ப்ளூ (Ganges Blue) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். டிசைன் மட்டுமல்லாமல், டிஸ்பிளே, கேமரா, சிப்செட் மற்றும் பேட்டரி போன்ற முக்கிய பீச்சர்களிலும் பட்டையை கிளப்புகிறது.

விவோ வி40 5ஜி அம்சங்கள் (vivo V40 Specifications): இந்த விவோ போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மட்டுமே கிடைக்கிறது. இருப்பினும், 3 ஓஎஸ் அப்டேட்களை கொடுக்கிறது. ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) கொண்ட ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 4என்எம் (Octa Core Qualcomm Snapdragon 7 Gen 3 4nm) சிப்செட் கிடைக்கிறது.

சாம்சங் ஐசோசெல் ஜிஎன்ஜே (Samsung ISOCELL GNJ) சென்சார் மட்டுமல்லாமல், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவில் ஜீஸ் ஆப்டிக்ஸ் (ZEISS Optics) சப்போர்ட் கிடைப்பதால் கேமரா அவுட்புட் பிரீமியமாக எதிர்பார்க்கலாம்.

50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 50 எம்பி ஆட்டோ போகஸ் செல்பீ கேமராவை கொடுக்கிறது. 3டி கர்வ்ட் டிஸ்பிளேவிலும் அதிக பேக்கப் கொடுக்கும்படி 5500mAh பேட்டரியை பேக் செய்துள்ளது. இந்த பெரிய பேட்டரிக்கு 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. IP68 ரேட்டிங் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது.

மேலும், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஆன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், டைப்-சி ஆடியோ போன்ற மிட்-ரேஞ்ச் பீச்சர்கள் கிடைக்கின்றன. பிரீமியம் டிஸ்பிளே, பர்ஃபாமென்ஸ் மற்றும் டிசைன் கொண்ட போன் வேண்டுமானால், இந்த விவோ வி40 5ஜி போனை ஆப்ஷனில் எடுக்கலாம். ஆண்ட்ராய்டு ஓஎஸ் மட்டும் பின்னடைவாக தோன்றலாம்.

அஃபிலியேட் லிங்க் வெளிப்படுத்துதல்: இந்த வலைத்தளத்தில் உள்ள அஃபிலியேட் லிங்க் மூலம் செய்யப்படும் கொள்முதல்களில் இருந்து கிஸ்பாட் வலைத்தளம் கமிஷன்களை சம்பாதிக்கிறது. தயாரிப்புகள் நேர்மையான கருத்துக்கள் மற்றும் தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படுகின்றன, உங்களுக்கு எந்த கூடுதல் செலவும் இல்லாமல்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo V40 5G With 50MP Camera Gets Discount on Croma Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X