பிப்.17-ல் புதுசா வர்ற VIVO போனுக்காக பழைய மாடலின் விலை குறைப்பு.. எந்த மாடல்? இப்போ எவ்வளவு கம்மி?
இந்திய சந்தையில் 6000mAh பேட்டரி பிரிவில் இப்படி ஒரு ஸ்லிம் ஆன ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆனதே இல்லை (India's Slimmest Smartphone in 6000mAh Battery Category) என்கிற விளம்பரத்தின் கீழ் விவோ வி50 (Vivo V50) ஸ்மார்ட்போன் வருகிற பிப்ரவரி 17 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
புதிய வி சீரிஸ் ஸ்மார்ட்போனின் அறிமுகத்தையொட்டி பழைய வி சீரீஸ் ஸ்மார்ட்போன் ஒன்றின் மீது தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அது விவோ வி40 5ஜி (Vivo V40 5G) ஸ்மார்ட்போனாகும். தற்போது இது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் விவோ வி40 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆகிய 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களும் தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது.

ரூ.34,999 க்கு அறிமுகமான 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் தற்போது ரூ.1,000 நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.33,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதேபோல ரூ.36,999 க்கு அறிமுகமான 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் (லோட்டஸ் பர்பிள் கலர்) ரூ.1,300 நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.35,699 க்கு வாங்க கிடைக்கிறது.
இருப்பினும் விவோ வி40 5ஜி ஸ்மார்ட்போன் உடன் சேர்ந்து, விவோ வி40 சீரிஸின் கீழ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டதா விவோ வி40 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மீது எந்த விலைக்குறைப்பும் , தள்ளூபடியும் கிடைக்கவில்லை. அமேசான் இந்தியா வலைத்தளத்தில் இன்னமும் இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.49,999 க்கு தான் வாங்க கிடைக்கிறது.
விவோ வி40 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடனான 6.78-இன்ச் HD+ AMOLED டிஸ்பிளே கொண்டுள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை இது 4என்எம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் மூலம் இயங்குகிறது.
கேமராக்களை பொறுத்தவரை, ஓஐஎஸ் (OIS) மற்றும் ஏஎப் (AF) ஆதரவு உடனான 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் 50 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா என்கிற ஸெய்ஸ் டூயல் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 50 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது. கடைசியாக 80W வயர்டு பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடனான 5500mAh பேட்டரியை கொண்டுள்ளது.
விவோ வி40 மீதான சலுகை ஒருபக்கம் இருக்க அமேசான் இந்தியா வலைத்தளத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான வேலடைன்ஸ் டே சிறப்பு விற்பனையும் (Amazon Valentines Day Sale 2025) நடக்கிறது. பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் தொடங்கிய அமேசான் வேலடைன்ஸ் டே சேல் ஆனது 2025 பிப்ரவரி 14 ஆம் தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதன்கீழ் என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது எவ்வளவு தள்ளுபடி கிடைக்கிறது என்கிற பட்டியல் இதோ:
01. சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா (Samsung Galaxy S23 Ultra 5G): இது ரூ.1,49,999 க்கு பதிலாக ரூ.71,999 க்கு வாங்க கிடைக்கிறது.
02. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 (OnePlus Nord CE 4): இது ரூ.24,999 க்கு பதிலாக ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது.
03. ஐக்யூ இஸட்எஸ் 5ஜி (iQOO Z9s 5G): இது ரூ.25,999 க்கு பதிலாக ரூ.18,499 க்கு வாங்க கிடைக்கிறது.
04. ரியல்மி நார்சோ டர்போ (Realme Narzo Turbo): இது ரூ.19,999 க்கு பதிலாக ரூ.13,999 க்கு வாங்க கிடைக்கிறது.
05. ரெட்மி ஏ4 5ஜி (Redmi A4 5G): இது ரூ.10,999 க்கு பதிலாக ரூ.8,299 க்கு வாங்க கிடைக்கிறது.
06. ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R): இது ரூ.44,999 க்கு பதிலாக ரூ.39,999 க்கு வாங்க கிடைக்கிறது.
07. சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி (Samsung Galaxy M35 5G): இது ரூ.24,999 க்கு பதிலாக ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கிறது.
08. 200ஹானர் 5ஜி (Honor 200 5G): இது ரூ.39,999 க்கு பதிலாக ரூ.27,999 க்கு வாங்க கிடைக்கிறது.
09. ஐக்யூ இஸட்9எஸ் ப்ரோ 5ஜி (iQOO Z9s Pro 5G): இது ரூ.29,999 க்கு பதிலாக ரூ.22,499 க்கு வாங்க கிடைக்கிறது.
10. ஒன்பிளஸ் 13 (OnePlus 13):இது ரூ.72,999 க்கு பதிலாக ரூ.64,999 க்கு வாங்க கிடைக்கிறது.
11. சாம்சங் கேலக்ஸி எம்15 ப்ரைம் எடிஷன் (Samsung Galaxy M15 Prime Edition): இது ரூ.16,999 க்கு பதிலாக ரூ.11,999 க்கு வாங்க கிடைக்கிறது.
12. ரியல்மி நார்சோ என்65 5ஜி (Realme Narzo N65 5G): இது ரூ.13,999 க்கு பதிலாக ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கிறது.
13. ரெட்மி நோட் 14 5ஜி (Redmi Note 14 5G): இது ரூ.24,999 க்கு பதிலாக ரூ.18,999 க்கு வாங்க கிடைக்கிறது.
14. போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி (Poco X6 Neo 5G): இது ரூ.19,999 க்கு பதிலாக ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கிறது.
Rs 19,999 Rs 10,999
15. லாவா ஓ3 (Lava O3): இது ரூ.7,199 க்கு பதிலாக ரூ.6,199 க்கு வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








