வேற 5G Phone வாங்கிடாதீங்க.. Infinity Eye கேமரா, IP68 ரேட்டிங் உடன் Vivo V40, Vivo V40 Pro.. என்ன விலை?
இது "5ஜி போன்களுக்கான மாதம்" என்று கூறும் அளவிற்கு.. இம்மாதம் (ஜூலை 2024) பல முக்கிய நிறுவனங்கள் தத்தம் லேட்டஸ்ட் பட்ஜெட்-விலை 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தன. அவைகளில் ரூ.15,999-க்கு அறிமுகமான சிஎம்எப் போன் 1 (CMF Phone 1), ரூ.13,999-க்கு அறிமுகமான ரெட்மி 13 5ஜி (Redmi 13 5G), ரூ.10,499-க்கு அறிமுகமான ஐக்யூ இஸட்9 லைட் 5ஜி (iQOO Z9 Lite 5G) ரூ.13,999-க்கு அறிமுகமான லாவா பிளேஸ் எக்ஸ் 5ஜி (Lava Blaze X 5G) மாடல்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளன.
ஒருவேளை உங்களுடைய கவனம் பட்ஜெட்-விலை 5ஜி ஸ்மார்ட்போன்களின் மீது இல்லை என்றால்.. மாறாக இன்னும் கொஞ்சம் நல்ல கேமரா, பவர்ஃபுல் சிப்செட், ஹை-குவாலிட்டி டிஸ்பிளே என.. இன்னும் கொஞ்சம் பெட்டர் ஆன 5ஜி போனை எதிர்பார்க்கிறீர்கள் என்றால்.. அப்பர் மிட்-ரேன்ஜ் விலையில் வரும் விவோ வி40 5ஜி சீரிஸ் (Vivo V40 5G Series) ஸ்மார்ட்போன்கள் உங்களுக்கானதாக இருக்கலாம். எப்போது அறிமுகம்? என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:

எப்போது இந்தியாவில் அறிமுகமாகும்? இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சரியான வெளியீட்டு தேதி பற்றிய விவரங்கள் இன்னும் பகிரப்படவில்லை. 91மொபைல்ஸ் வழியாக கிடைத்த அறிக்கையின்படி, இந்த போன்கள் ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.
என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? விவோ வி40 5ஜி (Vivo V40 5G) ஸ்மார்ட்போன் ஆனது ஏற்கனவே ஐரோப்பிய சந்தையில் அறிமுகமாகி விட்டதால், அது என்னென்ன அம்சங்களை பேக் செய்யும் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. இதற்கும், மறுகையில் உள்ள விவோ வி40 ப்ரோ 5ஜி (Vivo V40 Pro 5G) மாடலுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை பார்க்க நாம் இன்னும் சிறிது நாட்கள் காத்திருக்க வேண்டும்.
விவோ வி40 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது ஹை-எண்ட் யூசர் எக்ஸ்பீரியன்ஸை வழங்கும் நோக்கத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட ஃபீச்சர்-பேக்டு ஸ்மார்ட்போன் ஆகும். இது 8ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.
டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 120 ஹெர்ட்ஸ் ஹை ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1260 x 2800 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் கொண்ட 6.78-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளே கொண்டுள்ளதுபு வீதத்தையும் கொண்டுள்ளது. விவோ வி40 ஸ்மார்ட்போனின் தனித்துவமான அம்சங்களில் ஒன்று அதன் கேமரா செட்டப் ஆகும்.
இதன் கேமரா செட்டப்பில் இரண்டு 50எம்பி கேமராக்கள் உள்ளன: ஒரு வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் ஒரு அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமா. முன்பக்கத்தில் உள்ள கேமராவும் 50எம்பி செல்பீ ஸ்னாப்பர் ஆக உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை, இது 80W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட பெரிய 5500mAh பேட்டரி உடன் வருகிறது. விவோவின் கூற்றுப்படி, இதை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் நாள் முழுவதுமான பேட்டரி லைஃப்பை வழங்கும்.
கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, விவோ வி40 ஸ்மார்ட்போன் ஆனது ஐபி68 வாட்டர் மற்றும் டேஸ்ட் ரெசிஸ்டென்ஸ், 256 ஜிபி இன்டர்னல் மெமரி, 5ஜி ஆதரவு, வைஃபை 5, ப்ளூடூத் வி5.4, என்எப்சி மற்றும் யூஎஸ்பி டைப்-சி, இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார் போன்றவைகளை கொண்டுள்ளது.
என்ன விலைக்கு வரும்? ஐரோப்பாவில் விவோ வி40 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.54,300 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே போன்ற விலை நிர்ணயத்தை நாம் இந்தியாவிலும் எதிர்பார்க்கலாம். மறுகையில் உள்ள ப்ரோ வேரியண்ட்டின் விலை ரூ.60,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications








