Home
Mobile

மே 9ஆம் தேதி காலி.. பட்ஜெட்ல OIS கேமரா.. 3D டிஸ்பிளே.. 44W சார்ஜிங்.. 5500mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஜெம் கட் டிசைன் மற்றும் ஆரா லைட் கொண்ட சோனி சென்சார் கேமரா, 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, 16ஜிபி ரேம், 44W சார்ஜிங், 5500mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் விவோ வி30இ (Vivo V30e) போன் பட்ஜெட்டில் வெளியாகி இருக்கிறது.

விவோ வி30இ அம்சங்கள் (Vivo V30e Specifications): இந்த விவோவில் ஜெம் கட் டிசைன் மற்றும் ஆரா லைட் கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. ஆகவே, சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது.

மே 9ஆம் தேதி காலி.. பட்ஜெட்ல OIS கேமரா.. 3D டிஸ்பிளே.. 44W சார்ஜிங்!

ஆரா லைட் மட்டுமல்லாமல், ஸ்மார்ட் கலர் டெம்பரேச்சர் அட்ஜெட்மென்ட் (Smart Color Temperature Adjustments) வருவதால் ஸ்டூடியோ குவாலிட்டி நைட் போர்ட்ராய்டு (Night Portrait) அவுட்புட் எதிர்பார்க்கலாம். இந்த கேமராவில் 2எக்ஸ் ப்ரொபஷனல் போர்ட்ராய்டு மோட் (2x Professional Portrait Mode) வருகிறது.

ஆன்டி-ஷேக் (Anti-Shake) சப்போர்ட்டுக்காக ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி வருகிறது. அதேபோல 50 எம்பி ஆட்டோபோகஸ் செல்பீ கேமரா (Auto Focus Selfie Camera) வருகிறது. மெயின் கேமராவில் வெட்டிங் ஸ்டைல் போர்ட்ராய்டு (Wedding Style Portrait) போன்ற பிரத்யேக கேமரா பீச்சர்கள் வருகின்றன.

4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் அல்ட்ரா பிக்சல் கவுண்ட் (Ultra-High Pixel Count) கொண்டிருக்கிறது. ஆகவே, பிரீமியம் குவாவிட்டி கேமரா அவுட்புட் கொண்ட மொபைல் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த விவோ வி30இ மாடல் பக்காவாக இருக்கும். 6.78 இன்ச் (2400 ×1080 பிக்சல்கள்) டிஸ்பிளே வருகிறது.

மே 9ஆம் தேதி காலி.. பட்ஜெட்ல OIS கேமரா.. 3D டிஸ்பிளே.. 44W சார்ஜிங்!

இதுவொரு ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 3டி கர்வ்ட் அமோலெட் (3D curved AMOLED) டிஸ்பிளே மாடலாகும். 120Hz ரெஃப்ரெஷ் ரேட், டிசிபி பி3 கலர் காமட் மற்றும் லோவ் ஃபிளிக்கர் சர்டிபிகேஷன் (Low Flicker Certification) கொண்டிருக்கிறது. ஃபன்டச்ஓஎஸ் 14 (Funtouch OS 14), ஆண்ட்ராய்டு 14 (Android 14 OS) வருகிறது.

இந்த விவோ வி30இ போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 6 Gen 1 4nm Mobile) சிப்செட் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) சப்போர்ட் கொண்டிருக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. மைக்ரோஎஸ்டி சப்போர்ட் கொண்டுள்ளது.

அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட்டும் விற்பனைக்கு வர இருக்கிறது. மேலும், 8 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஆகவே, ஹைபிரிட் டூயல் சிம் சிலாட் மற்றும் மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவோ போனில் டைப்-சி போர்ட் கொண்ட 5500mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. அதேபோல யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), IP64 வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ட் வருகிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ கனெக்டிவிட்டி கொண்டுள்ளது.

வெல்வெட் ரெட் (Velvet Red) சில்க் ப்ளூ (Silk Blue) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.27,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.29,999ஆகவும் இருக்கிறது. மே 9ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.

பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் விவோ இந்தியா இ-ஸ்டோர் (vivo India e-store) ஆகிய தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த போனுக்கு அறிமுக சலுகையாக 10 சதவீதம் உடனடி கேஷ் பேக் கொடுக்கப்படுகிறது. இந்த கேஷ் பேக்கை ஐசிஐசிஐ, எஸ்பிஐ, ஐடிஎப்சி போன்ற வங்கி கார்டுகளை பயன்படுத்தி பெற்று கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo V30e With 50MP Camera Launched Sale From May 9 on Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X