அசரவைத்த விவோ.. AMOLED டிஸ்பிளே.. 512GB மெமரி.. 80W சார்ஜிங்.. புதிய 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் தனது விவோ வி30 ஸ்மார்ட்போனை இந்தோனேசியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வரும் மார்ச் 7-ம் தேதி இந்தியாவில் கூட அறிமுகம் செய்யப்பட உள்ளது.
50எம்பி டூயல் ரியர் கேமரா, ஸ்னாப்டிராகன் சிப்செட் மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் விவோ வி30 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

விவோ வி30 அம்சங்கள்: 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே ( AMOLED display) வசதியைக் கொண்டுள்ளது விவோ வி30. பின்பு 2800 x 1260 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 300 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 7 Gen 3)வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான விவோ வி30 ப்ரோ ஸ்மார்ட்போன். ஃபன்டச்ஒஎஸ் 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த விவோ வி30 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி ஆகிய இரண்டு வேரியண்ட்களில் விவோ வி30 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.
ஒஐஎஸ் ஆதரவு கொண்ட 50எம்பி பிரைமரி கேமரா + 50 அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ வி30 மாடல். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த அட்டகாசமான விவோ போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். 5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ வி30 ஸ்மார்ட்போன். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, புளூடூத் 5.0, ஜிபிஎஸ் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. ஈக்வடோரியல் கிரீன் (Equatorial Green), புஸ்பா ஒயிட் (Puspa White) மற்றும் வால்கானிக் பிளாக் (Volcanic Black) நிறங்களில் இந்த போன் வாங்க கிடைக்கும்.
குறிப்பாக விவோ வி30 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆரம்ப விலை $380 (இந்திய மதிப்பில் ரூ. 31,510) -ஆக உள்ளது. விரைவில் இந்த போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications