ப்ரீ-புக்கிங்கே மிரண்டுபோச்சு.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 12GB ரேம்.. OIS கேமரா.. 80W சார்ஜிங்.. எந்த போன்?
பட்ஜெட்டில் கேமரா பிரியர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்ட விவோ வி30 (Vivo V30) போனானது, 12 ஜிபி ரேம், 50 எம்பி ஆரா லைட் கேமரா, அல்ட்ரா ஸ்லிம் 3டி கர்வ்ட் டிஸ்பிளே, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்களுடன் வெளியாகியிருக்கிறது.
விவோ வி30 விலை (Vivo V30 Price): இந்த விவோ போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.33,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 35,999ஆகவும் இருக்கிறது. அதேபோல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் மாடலின் விலை ரூ.37,999ஆக இருக்கிறது.

இந்த போனை பிளிப்கார்ட் மற்றும் விவோ.காம் ஆகிய தளங்களில் ஆர்டர் செய்துகொள்ளலாம். எச்டிஎப்சி, எஸ்பிஐ கார்டுகளுக்கு 10 சதவீதம் டிஸ்கவுண்ட் மற்றும் 6 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ கொடுக்கப்படுகிறது. இப்போது, ப்ரீ-புக்கிங்குக்கு வந்து மார்கெட்டை மிரளவிட்டுள்ளது. மார்ச் 14ஆம் தேதி விற்பனை தொடங்குகிறது.
விவோ வி30 அம்சங்கள் (Vivo V30 Specifications): இந்த விவோவில் மிட்-ப்ரீமியம் டிஸ்பிளே சிஸ்டம் வருகிறது. 6.78 இன்ச் (2800×1260 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே இருக்கிறது. இதுவொரு அல்ட்ரா-ஸ்லிம் 3டி கர்வ்ட் டிஸ்பிளே (Ultra-Slim 3D Curved Display) மாடலாகும்.
எச்டிஆர்10பிளஸ் (HDR10+), 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது. இந்த கேமராவில் விசிஎஸ் (VCS), ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி சப்போர்ட் வருகிறது.

ரியர் ஸ்மார்ட் ஆரா லைட் (Rear Smart Aura Light) கொண்டுள்ளது. ஆகவே, ஸ்டூடியோ-குவாலிட்டி ஆரா லைட் போர்ட்ராய்டு (Studio-Quality Aura Light Portrait) கேமரா அவுட்புட் எதிர்பார்க்கலாம். அதேபோல 50 எம்பி ஏஎப் (AF) செல்பீ கேமரா வருகிறது. இந்த கேமராவில் ஆட்டோபோகஸ் (Autofocus) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. எஸ்டி கார்டு சப்போர்ட் கிடையாது. இந்த விவோவில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் மற்றும் ஃபன்டச்ஓஎஸ் 14 சப்போர்ட் வருகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 4என்எம் மொபைல் (Qualcomm Snapdragon 7 Gen 3 4nm Mobile) சிப் வருகிறது.
அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கொண்டிருக்கிறது. இந்த விவோவில் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் கொண்ட பாட்டம்-போர்டெட் ஸ்பீக்கர் (Bottom-ported Speaker) கொண்டுள்ளது. யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio) உள்ளது.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் IP54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வருகிறது. 7.45 எம்எம் தடிமன், 186 எடை கொண்டிருக்கிறது. பீகாக் கிரீன் (Peacock Green), அந்தமான் ப்ளூ (Andaman Blue) மற்றும் கிளாசிக் பிளாக் (Classic Black) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications








