மார்க்கெட் மிரளும்.. Snapdragon சிப்செட்.. 12ஜிபி ரேம்.. வேற லெவல் Vivo போன்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் தனது விவோ வி30 ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது கீக்பெஞ்ச் தரவுத்தளத்தில் இந்த புதிய விவோ போன் காணப்பட்டுள்ளது. எனவே விரைவில் உலக சந்தை மற்றும் இந்திய சந்தையில் இந்த விவோ வி30 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் இந்த விவோ வி30 (Vivo V30) போனின் மாடல் எண் V2318 ஆகும். மேலும் இந்த புதிய விவோ வி30 ஸ்மார்ட்போன் ஆனது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்று விவோ நிறுவனம் கூறியுள்ளது. பின்பு ஆன்லைனில் கசிந்த இந்த விவோ வி30 ஸ்மார்ட்போனின் சில அம்சங்களை இப்போது பார்ப்போம்.

அதாவது குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் வசதியுடன் இந்த விவோ வி30 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு இந்த போனில் கொடுக்கப்பட்டுள்ளது. கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.
ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதி இந்த விவோ வி30 ஸ்மார்ட்போனில் உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இதில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
குறிப்பாக 5000 எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, ட்ரிபிள் ரியர் கேமரா உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த விவோ வி30 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். பின்பு ஆன்லைனில் வெளியான தகவலின்படி இந்த விவோ வி30 ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் உலக சந்தையில் அறிமுகம் செய்த விவோ ஒய்27எஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம். விவோ ஒய்27எஸ் ஸ்மார்ட்போன் 6.64-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி (full-HD+ LCD)டிஸ்பிளே வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டது. 2,388 x 1,080 பிக்சல்ஸ், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதிகளைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
விவோ ஒய்27எஸ் ஸ்மார்ட்போனில் சக்திவாய்ந்த ஆக்டோ-கோர்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 (octa-core Qualcomm Snapdragon 680)சிப்செட் வசதி உள்ளது. அதேபோல் ஃபன்டச் ஒஎஸ் 13 (FuntouchOS 13) சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதள வசதியுடன் இந்த விவோ ஒய்27எஸ் ஸமார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும்.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் விவோ ஒய்27எஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு (microSD card) ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது விவோ ஒய்27எஸ் போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் விவோ ஒய்27எஸ் போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி ( 44W wired fast charging), கைரேகை ஸ்கேனர் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
4ஜி நானோ சிம்கள், வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத் 5.0, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த விவோ ஒய்27எஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. விவோ ஒய்27எஸ் போனின் விலை IDR 2,399,000 (இந்திய மதிப்பில் ரூ.12,800) ஆகும்.


Click it and Unblock the Notifications








