மார்ச் 7 சம்பவம் உறுதி.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. OIS கேமரா.. AURA லைட்.. ULTRA ஸ்லிம்.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த கேமரா பிரியர்களையும் தட்டித்தூக்கும் விதமாக ஜெய்ஸ் போர்ட்ராய்டு கேமரா (Zeiss Portrait Camera), ஓஐஎஸ் டெக்னாலஜி, ஆரா லைட் போன்ற அம்சங்களுடன் விவோ வி30 (Vivo V30) மற்றும் விவோ வி30 ப்ரோ (Vivo V30 Pro) போன்கள் வெளியாகிறது.
இந்த விவோ வி30 சீரிஸ் (Vivo V30 Series) போன்கள் வரும் மார்ச் 7ஆம் தேதி இந்திய மார்கெட்டில் அறிமுகமாகின்றன. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே, அந்த போன்களின் அம்சங்கள் கசிந்து வருகின்றன. இந்தோனிஷியாவில் பிப்ரவரி 28ஆம் தேதியே வெளியாவதால், விலை விவரங்களும் கசிந்துவிட்டன.
விவோ வி30, வி30 ப்ரோ அம்சங்கள் (Vivo V30, V30 Pro Specifications): இந்த போன்களில் 6.78 இன்ச் 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. அல்ட்ரா ஸ்லிம் (Ultra Slim) டிசைன் கொண்டிருக்கிறது. 50 எம்பி ஆட்டோ போகஸ் (Autofocus) செல்பீ கேமரா வருகிறது.

விவோ வி30 போனில் ஓஐஎஸ் (OIS) சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. விவோ வி30 ப்ரோவில் சோனி ஐஎம்எக்ஸ்920 (Sony IMX920) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு சோனி ஐஎம்எக்ஸ்816 (Sony IMX816) சென்சார் கொண்ட அல்ரா வைடு கேமரா வருகிறது.
அதுமட்டுமல்லாமல், 3x ஆப்டிகல் ஜூமிங் சப்போர்ட் கொண்ட 50 எம்பி டெலிபோட்டோ கேமரா வருகிறது. ஜெய்ஸ் போர்ட்ராய்டு சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஃபன்டச்ஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் சப்போர்ட் கொண்டிருக்கிறது. விவோ வி30 போனில் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் வருகிறது. ஆனால், விவோ வி30 ப்ரோவில் டைமன்சிட்டி 8200 சிப்செட் வருகிறது.

இந்த போன்களில் 5000mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கசிந்த அம்சங்களில் ஜெய்ஸ் போர்ட்ராய்டு கேமரா, 3டி கர்வ்ட் டிஸ்பிளே, 5000mAh பேட்டரி, அல்ட்ரா ஸ்லிம் டிசைன் ஆகிய அம்சங்களை மட்டுமே இந்திய விவோ நிறுவனம் உறுதி செய்திருக்கிறது. இப்போது விலை விவரங்களை பார்ப்போம்.
விவோ வி30, வி30 ப்ரோ விலை (Vivo V30, V30 Pro Price): விவோ வி30 போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.31,830ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.37,135ஆகவும் இருக்கிறது. அதேபோல விவோ வி30 ப்ரோ போனின் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.47,663ஆக இருக்கிறது.
இந்த விலை விவரங்கள் இந்தோனிஷியா மார்கெட்டில் கசிந்தவையாகும். இதே பட்ஜெட்டில், இந்திய மார்கெட்டில் வெளியாக அதிக வாய்ப்புள்ளது. இந்த போன்களில் கிளாசிக் பிளாக் (Classic Black), அந்த மான் ப்ளூ (Andaman Blue) மற்றும் பீகாக் கிரீன் (Peacock Green) ஆகிய 3 கலர்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன.


Click it and Unblock the Notifications