வெளுத்துக்கட்டும் புக்கிங்.. பட்ஜெட்ல SONY கேமரா.. ZEISS பொக்கெ.. 3D டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
சோனி கேமரா, 3டி டிஸ்பிளே, ஜீஸ் போர்ட்ராய்டு, ஆண்ட்ராய்டு 14, 12ஜிபி ரேம் போன்ற பட்டையை கிளப்பும் அம்சங்களுடன் விவோ வி30 ப்ரோ (Vivo V30 Pro) போன் பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் விலை, விற்பனை விவரங்கள் இதோ.
விவோ வி30 ப்ரோ அம்சங்கள் (Vivo V30 Pro Specifications): இந்த ப்ரோ மாடலில் 6.78 இன்ச் (2800 × 1260 பிக்சல்கள்) 3டி கரவ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரொசொலூஷன், எச்டிஆர்10பிளஸ் (HDR10+), 120Hz ரெஃப்ரெஷ் ரேட், டிசிஐ-பி3 கலர் காமட் (DCI-P3 Color Gamut) மற்றும் 2800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

டெலிபோட்டோ, ஓஐஎஸ் (OIS) கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. சோனி ஐஎம்எக்ஸ் (Sony IMX920) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா + சோனி ஐஎம்எக்ஸ்816 (Sony IMX816) சென்சாருடன் 50 எம்பி டெலிபோட்டோ போர்ட்ராய்டு கேமரா (Telephoto Portrait Camera) கேமரா வருகிறது.
50 எம்பி அல்ட்ரா வைடு சென்சார் (Ultra-wide Sensor) வருகிறது. அதேபோல 50 எம்பி ஆட்டோபோகஸ் செல்பீ வருகிறது. ஆகவே, கேமரா பர்ஃபாமென்ஸ் மிரளவிடும் விதமாகவே இருக்கும். அதுமட்டுமல்லாமல், ஆரா லைட் (Aura Light) சப்போர்ட் கொண்டிருப்பதால், நைட் போட்டோ அவுட்புட் சினிமாடிக் தரத்தில் இருக்கும்.
இந்த கேமராவில் ஜீஸ் ஸ்டைல் போர்ட்ராய்டு (ZEISS Style Portrait) பீச்சர்கள் வருகின்றன. ஜீஸ் பயோடர் ஸ்டைல் பொக்கெ (ZEISS Biotar Style Bokeh), ஜீஸ் பிளானர் ஸ்டைல் பொக்கெ (ZEISS Planar Style Bokeh), ஜீஸ் டிஸ்டாகன் ஸ்டைல் பொக்கெ (ZEISS Distagon Style Bokeh), ஜீஸ் சோனார் ஸ்டைல் பொக்கெ (ZEISS Sonnar Style Bokeh) போன்ற பீச்சர்கள் இருக்கின்றன.

அதுமட்டுமல்லாமல், சினிமாடிக் லெவல் போட்டோகிராபிக்காக ஜீஸ் சினிமாடிக் ஸ்டைல் பொக்கெ (ZEISS Cinematic Style Bokeh) போன்ற பீச்சரும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விவோ வி30 ப்ரோவில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன.
ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) சப்போர்ட் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8200 4என்எம் (Octa Core MediaTek Dimensity 8200 4nm) சிப்செட் வருகிறது. மாலி ஜி610 எம்சி6 ஜிபியு (Mali G610 MC6 GPU) கிராபிக்ஸ் சப்போர்ட் உள்ளது. ஸ்லிம் டிசைனிலும் 5000mAh பேட்டரி வருகிறது.
இந்த பேட்டரிக்கு 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் (Fast Charging Support) வருகிறது. 7.45 மிமீ தடிமன் மட்டுமே இருக்கிறது. அதேபோல 188 கிராம் எடை கொண்டிருக்கிறது. IP54 தர ரெசிஸ்டன்ட் மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் டைப்-சி ஆடியோ (Type-C Audio) வருகிறது.
விவோ வி30 ப்ரோ விலை (Vivo V30 Pro Price): இந்த போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.41,999ஆக இருக்கிறது. அதேபோல 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.46,999ஆக இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ப்ரீ-புக்கிங் தொடங்கிவிட்டது. வரும் மார்ச் 14ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








