Home
Mobile

விட்ராதீங்க சார்.. Flipkart ஆபர்ல 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 80W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

3டி கர்வ்ட் டிஸ்பிளே போனை கம்மியான பட்ஜெட்டில் ஆர்டர் செய்ய திட்டமிட்ட கஸ்டமர்களுக்கு பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) பட்டையை கிளப்பும் நேரம் வந்துவிட்டது. டிஸ்பிளே பீச்சர்கள் மட்டுமல்லாமல், சோனி சென்சாருடன் ஜீஸ் அவுட்புட் கொடுக்கும் கேமரா சிஸ்டம், 80W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 5000mAh பேட்டரி சிஸ்டம், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் உடன் 4என்எம் டைமன்சிட்டி 8200 சிப்செட் சிஸ்டம் போன்ற பீச்சர்களை கொடுக்கும் விவோ வி30 ப்ரோ (Vivo V30 Pro) போனானது டிஸ்கவுண்ட்டில் கிடைக்கிறது.

இந்த விவோ போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.41,999ஆக இருந்தது. இருப்பினும், பிளிப்கார்ட் தளத்தில் ரூ.38,999 பட்ஜெட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இது நேரடி விலை குறைப்பு சலுகையாகும். இதுபோக, கூடுதலாக பேங்க் டிஸ்கவுண்ட் பெற்று கொள்ளலாம். எச்டிஎப்சி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு ரூ.4000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

விட்ராதீங்க சார்! Flipkart ஆபர்ல 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. எந்த போன்?

ஆகவே, ரூ.41,999 பட்ஜெட்டில் வந்த இந்த விவோ வி30 ப்ரோ போனை வெறும் ரூ.33,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். ஈஎம்ஐ மூலம் ஆர்டர் செய்தால், எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.4000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கும். அதேபோல எச்டிஎப்சி கிரெடிட் கார்டுக்கும் ரூ.4000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ரூ.9,600 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கூடுதலாக கொடுக்கப்படுகிறது.

விவோ வி30 ப்ரோ அம்சங்கள் (Vivo V30 Pro Specifications): ரூ.40000 பட்ஜெட்டில் வெளியான மாடலில் பீச்சர்கள் எப்படி இருக்கும் என்று உங்களுக்கே தெரியும். பிரீமியம் போன்களில் எதிர்பார்க்கும் டிஸ்பிளே பீச்சர்களை கொடுத்துள்ளது. 2800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.78 இன்ச் (2800 × 1260 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளேவை பேக் செய்துள்ளது.

இந்த அமோலெட் டிஸ்பிளேவில் 1.5K ரொசொலூஷனில் வீடியோக்களை பார்த்து கொள்ளலாம். ஓடிடி பிரியர்களுக்காக எச்டிஆர்10பிளஸ் (HDR10+) கிடைக்கிறது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், பி3 கலர் காமட் (P3 Color Gamut) மற்றும் வெட்-ஹேண்ட் டச் (Wet-Hand Touch) சப்போர்ட் கிடைக்கிறது. 7.45 மிமீ தடிமனில் இந்த டிஸ்பிளே இருக்கிறது. ஆகவே, ஹேண்டி கம்போர்ட் கிடைக்கும்.

விட்ராதீங்க சார்! Flipkart ஆபர்ல 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. எந்த போன்?

இந்த ஸ்லிம் பாடியிலும் ஸ்லிம் 5000mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கிறது. இந்த விவோ வி30 ப்ரோ போன் பர்ஃபாமென்ஸ் பீச்சர்களிலும் மிரளவிட்டிருக்கிறது. 4என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8200 எஸ்ஓசி (4nm Octa Core MediaTek Dimensity 8200 SoC) சிப்செட்டையும், மாலி ஜி610 ஜிபியு (Mali G610 GPU) கிராபிக்ஸ் கார்டையும் கொடுக்கிறது.

லேட்டஸ்ட் யுஐ அனுபவத்துக்காக ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் ஃபன்டச்ஓஎஸ் 14 (Funtouch OS 14) இருக்கிறது. கேமராவை உண்மையிலேயே பாராட்டலாம். சோனி சென்சார்களுடன் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. கூடவே 50 எம்பி அல்ட்ரா வைடு கேமராவுடன் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டத்தை கொடுத்து இருக்கிறது.

சென்சார்களை பார்க்கையில் மெயினில் சோனி ஐஎம்எக்ஸ் (Sony IMX920) சென்சாரும், டெலிபோட்டோவில் சோனி ஐஎம்எக்ஸ்816 (Sony IMX816) சென்சாரும் கிடைக்கிறது. வீடியோக்களுக்கு வழக்கமாக கிடைக்கும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் இந்த கேமராவிலும் கிடைக்கிறது. 50 எம்பி செல்பீ ஷூட்டரில் சென்சார்கள் இல்லை, இருப்பினும் ஆட்டோபோகஸ் சப்போர்ட் வருகிறது.

இந்த கேமராவில் ஜீஸ் போட்டோகிராபி பீச்சர்கள் கிடைக்கின்றன. மேலும், லைட்னிங் போட்டோகிராபி கொடுக்க ஆரா லைட் (Aura Light) கிடைக்கிறது. வெட் டச் சப்போர்ட் மட்டுமல்லாமல், IP54 டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் உள்ளது. அந்தமான் ப்ளூ (Andaman Blue) அல்லது கிளாசிக் பிளாக் (Classic Black) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ள முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo V30 Pro With 50MP Camera Gets 17 Percent Discount in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X