Home
Mobile

மிரள வைக்கும் விவோ.. 12GB ரேம்.. Sony கேமரா.. AMOLED டிஸ்பிளே.. புதிய 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் அடுத்த மாதம் விவோ வி30 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியா மற்றும் உலக சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது விவோ வி30, விவோ வி30 ப்ரோ போன்ற ஸ்மார்ட்போன்கள் தான் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

இந்நிலையில் விவோ வி30 ப்ரோ ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் வெளியாகி உள்ளன. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

மிரள வைக்கும் விவோ.. 12GB ரேம்.. Sony கேமரா..புதிய 5ஜி போன் ரெடி..

விவோ வி30 ப்ரோ அம்சங்கள் (Vivo V30 Pro specifications) : சக்திவாய்ந்த டைமன்சிட்டி 8200 சிப்( Dimensity 8200 chip) வசதியுடன் விவோ வி30 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் ஆப் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் +256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் இந்த விவோ வி30 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

6.78-இன்ச் ஃபுல் எச்டி அமோலெட் (FHD+ AMOLED )டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும் விவோ வி30 ப்ரோ ஸ்மார்ட்போன். குறிப்பாக இதன் டிஸ்பிளேவில் 1,260x2,800 பிக்சல்கள், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ( 120Hz refresh rate), எச்டிஆர் 10 பிளஸ், 2800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.

இந்த விவோ போனின் வலது பக்கத்தில் பவர் பட்டன் மற்றும் வால்யூம் ராக்கர் உள்ளன. அதேபோல் பஞ்ச்-ஹோல் கட்அவுட் டிசைன், வளைந்த டிஸ்பிளே, ஆரா லைட் போன்ற பல்வேறு சிறப்பான வசதிகளுடன் இந்த விவோ வி30 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்920 (Sony IMX920) பிரைமரி கேமரா + 50எம்பி சாம்சங் ஜேஎன்1 சென்சார் (Samsung JN1 sensor)அல்ட்ரா வைடு கேமரா + 12எம்பி சோனி ஐஎம்எக்ஸ்663 (Sony IMX663) டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ வி30 ப்ரோ ஸ்மார்ட்போன்.

மிரள வைக்கும் விவோ.. 12GB ரேம்.. Sony கேமரா..புதிய 5ஜி போன் ரெடி..

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவைக் கொண்டுள்ளது விவோ வி30 ப்ரோ ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம். அதேபோல் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் இந்த விவோ போன் வெளிவரும்.

5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது விவோ வி30 ப்ரோ ஸ்மார்ட்போன். இந்த புதிய விவோ போன் இந்தியாவில் ரூ.30,000 அல்லது ரூ.35,000 விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo V30 Pro will be launched with Dimensity 8200 chip: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X