Home
Mobile

மார்க்கெட்டே அதிர போகுது.. 80W சார்ஜிங்.. Sony கேமரா.. டிச.28-ம் தேதி வருகிறது புதிய Vivo போன்.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் தனது புதிய விவோ வி30 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுக தேதியை வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் ட்ரிபிள் ரியர் கேமரா, டைமன்சிட்டி 8200 சிப் மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவரும். மேலும் இந்த போனின் அம்சங்கள் மற்றும் அறிமுக தேதி குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

விவோ வி30 ப்ரோ அம்சங்கள் (Vivo V30 Pro specifications): 6.78-இன்ச் ஃபுல் எச்டி அமோலெட் (FHD+ AMOLED ) டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும் விவோ வி30 ப்ரோ ஸ்மார்ட்போன். குறிப்பாக இதன் டிஸ்பிளேவில் 1,260x2,800 பிக்சல்கள், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ( 120Hz refresh rate), எச்டிஆர் 10 பிளஸ், 2800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

மார்க்கெட்டே அதிர போகுது.. டிச.28-ம் தேதி வருகிறது புதிய Vivo போன்..

இந்த விவோ வி30 ப்ரோ ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் +256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது

டைமன்சிட்டி 8200 சிப்( Dimensity 8200 chip) வசதியுடன் விவோ வி30 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் ஃபன்டச் 14 ஓஎஸ் சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

விவோ வி30 ப்ரோ போனின் வலது பக்கத்தில் பவர் பட்டன் மற்றும் வால்யூம் ராக்கர் உள்ளன. அதேபோல் பஞ்ச்-ஹோல் கட்அவுட் டிசைன், வளைந்த டிஸ்பிளே, ஆரா லைட் போன்ற பல்வேறு சிறப்பான வசதிகளுடன் இந்த விவோ வி30 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்920 (Sony IMX920) பிரைமரி கேமரா + 50எம்பி சாம்சங் ஜேஎன்1 சென்சார் (Samsung JN1 sensor)அல்ட்ரா வைடு கேமரா + 12எம்பி சோனி ஐஎம்எக்ஸ்663 (Sony IMX663) டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டு இந்த விவோ வி30 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும்.

மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவைக் கொண்டுள்ளது விவோ வி30 ப்ரோ ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம். அதேபோல் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் இந்த விவோ போன் வெளிவரும்.

மார்க்கெட்டே அதிர போகுது.. டிச.28-ம் தேதி வருகிறது புதிய Vivo போன்..

விவோ வி30 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது விவோ வி30 ப்ரோ ஸ்மார்ட்போன்.

விவோ வி30 ப்ரோ எப்போது அறிமுகம்? வரும் பிப்ரவரி 28-ம் தேதி இந்த விவோ வி30 ப்ரோ ஸ்மார்ட்போன் தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்படும். பின்பு அடுத்த மாதம் துவக்கத்தில் விவோ வி30 ப்ரோ இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த போன் ரூ.30,000 பட்ஜெட்டில் விற்பனைக்கு என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo V30 Pro will be launched on February 28: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X