Home
Mobile

தரமான செய்கை.. AMOLED டிஸ்பிளே.. 50எம்பி கேமரா.. அறிமுகமானது விவோ போன்.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் தனது விவோ வி30 ப்ரோ ஸ்மார்ட்போனை இந்தியாவில் வரும் மார்ச் 7-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. ஆனால் அதற்கு முன்பே இந்தோனேசியாவில் அதிகாரப்பூர்வமாக இந்த விவோ வி30 ப்ரோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது இன்று தான் இந்தோனேசியாவில் விவோ வி30 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக Zeiss கேமராக்களுடன் வரும் முதல் போன் இந்த விவோ வி30 ப்ரோ மாடல். மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

தரமான செய்கை.. AMOLED டிஸ்பிளே.. அறிமுகமானது விவோ போன்.. எந்த மாடல்?

விவோ வி30 ப்ரோ அம்சங்கள் (Vivo V30 Pro specifications): 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே(AMOLED display) வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 2800×1260 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது
இந்த போனின் டிஸ்பிளே.

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 8200 சிப்செட் (MediaTek Dimensity 8200 SoC)வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான விவோ வி30 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் மாலி-ஜி610 எம்சி6 ஜிபியு (Mali-G610 MC6 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி ஆகிய இரண்டு வேரியண்ட்களில் விவோ வி30 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

ஃபன்டச்ஒஎஸ் 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த விவோ வி30 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்920 பிரைமரி கேமரா (Sony IMX920 primary camera) + 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்816 போர்ட்ரெயிட் கேமரா(Sony IMX816 portrait camera) +50எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ வி30 ப்ரோ மாடல். Zeiss ஸ்டைல் கேமரா வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் இரவு நேரங்களில் கூட அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும்.

தரமான செய்கை.. AMOLED டிஸ்பிளே.. அறிமுகமானது விவோ போன்.. எந்த மாடல்?

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த அட்டகாசமான விவோ போன். குறிப்பாக 5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ வி30 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

வோல்கானிக் பிளாக் (Volcanic Black) மற்றும் ஈக்வடோரியல் கிரீன் (Equatorial Green) நிறங்களில் புதிய விவோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக விவோ வி30 ப்ரோ ஸ்மார்ட்போன் Rp 8,999,000(இந்திய மதிப்பில் ரூ.47,600) விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo V30 Pro launched in indonesia: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X