இது வேற மாறி.. பட்ஜெட்ல SONY கேமரா.. ZEISS போர்ட்ராய்டு.. 3D டிஸ்பிளே.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்திய கேமரா பிரியர்களுக்காகவே ஜெய்ஸ் போர்ட்ராய்டு (Zeiss Portrait), சோனி சென்சார் டெலிபோட்டோ, ஆரா லைட் போன்ற அம்சங்களுடன் மார்ச் 7ஆம் வெளியாக இருக்கும் விவோ வி30 சீரிஸ் (Vivo V30 Series) போன்களின் விலை மற்றும் அம்சங்கள் கசிந்து இருக்கின்றன.
விவோ வி30 ப்ரோ அம்சங்கள் (Vivo V30 Pro Specifications): இந்த ப்ரோ மாடலில் 6.78 இன்ச் (1260 x 2800 பிக்சல்கள்) கர்வ்ட் எட்ஜ் அமோலெட் (Curved-edge AMOLED) டிஸ்பிளே வருகிறது. 1.5K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது.

ஃபன்டச்ஓஎஸ் ஓஎஸ் 14 (FunTouch OS 14) மற்றும் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8200 4என்எம் (Octa Core MediaTek Dimensity 8200 4nm) சிப்செட் வருகிறது. சோனி ஐஎம்எக்ஸ்920 (Sony IMX920) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு சென்சார் வருகிறது.
சோனி ஐஎம்எக்ஸ்816 (Sony IMX816) சென்சார் கொண்ட 50 எம்பி டெலிபோட்டோ கேமரா (Telephoto Portrait Camera) வருகிறது. இதுவொரு ஜெய்ஸ் போர்ட்ராய்டு கேமரா (Zeiss Portrait Camera) கேமரா மாடலாகும். அதோடு ஓஐஎஸ் (OIS), ஆரா லைட் (Auro Light) சப்போர்ட் கொண்டிருக்கிறது.
50 எம்பி ஆட்டோபோகஸ் (AutoFocus) செல்பீ கேமரா வருகிறது. 80W சார்ஜிங் + 5000mAh பேட்டரி வருகிறது. பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ சப்போர்ட் கொண்டுள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் IP54 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வருகிறது.
விவோ வி30 அம்சங்கள் (Vivo V30 Specifications): இந்த போனின் சிப்செட் மற்றும் கேமரா அம்சங்களை தவிர மற்ற அனைத்து அம்சங்களும் ப்ரோ மாடலில் இருப்பதை போலவே இருக்கின்றன. ஆகவே, இந்த மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 4என்எம் மொபைல் (Qualcomm Snapdragon 7 Gen 3 4nm Mobile) சிப்செட் வருகிறது.
50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு சென்சார் (Ultra-wide Sensor) + 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா (Portrait Camera) வருகிறது. இந்த அம்சங்கள் அனைத்தும் மார்கெட்டில் கசிந்த அம்சங்கள் மட்டுமே. இந்த அம்சங்களில் பேட்டரி மற்றும் ஜெய்ஸ் கேமரா அம்சங்களை மட்டுமே விவோ இந்தியா நிறுவனம் உறுதி செய்திருக்கிறது.
விவோ வி30, வி30 ப்ரோ விலை (Vivo V30, V30 Pro Price): விவோ வி30 போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.33,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.35,999ஆகவும் இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் மாடலின் விலை ரூ.37,999ஆக இருக்கிறது.
விவோ வி30 ப்ரோ போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.41,999ஆகவும், 12 ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.44,999ஆகவும் இருக்கிறது. இந்த விலை விவரங்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், இந்தோனிஷியாவில் இந்த போன்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை பட்டியல் இதே போன்று இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








