Home
Mobile

மிரண்டு போவீங்க.. 44W சார்ஜிங்.. 256GB மெமரி.. இந்தியாவுக்கு வரும் மிரட்டலான விவோ போன்.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் இந்தியாவில் விவோ வி30 மற்றும் விவோ வி30 லைட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய விவோ போன்களை வரும் வாரங்களில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் விவோ வி30 லைட் ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த விவோ வி30 லைட் (Vivo V30 Lite) ஸ்மார்ட்போன் ஆனது ஆணட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

இந்தியாவுக்கு வரும் மிரட்டலான விவோ போன்.. எந்த மாடல்?

அதேபோல் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த விவோ வி30 லைட் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

4700 எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த விவோ வி30 லைட் போன் அறிமுகமாகும். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இதை சார்ஜ் செய்ய 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் இந்த அட்டகாசமான விவோ போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் விவோ வி30 லைட் போன் வெளிவரும். தற்போது இந்த போனின் சில அம்சங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் விவோ வி30 லைட் போனின் அனைத்து அம்சங்களும் வெளிவரும்.

மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் இந்தோனேசியாவில் அறிமுகம் செய்த விவோ ஒய்27எஸ் (Vivo Y27s) போனின் சிறப்பு அம்சங்களை இப்போது பார்ப்போம். 6.64-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி (full-HD+ LCD)டிஸ்பிளே வசதியுடன் விவோ ஒய்27எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் 2,388 x 1,080 பிக்சல்ஸ், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதிகளைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

சக்திவாய்ந்த ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 (octa-core Qualcomm Snapdragon 680)சிப்செட் வசதி விவோ ஒய்27எஸ் ஸ்மார்ட்போனில் உள்ளது. அதேபோல் ஃபன்டச் ஒஎஸ் 13 (FuntouchOS 13) சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதள வசதியுடன் இந்த விவோ ஒய்27எஸ் ஸமார்ட்போன் அறிமும் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் விவோ ஒய்27எஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும்.நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு (microSD card) ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது. 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் விவோ ஒய்27எஸ் போன் வெளிவந்துள்ளது. . பின்பு 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி ( 44W wired fast charging), கைரேகை ஸ்கேனர் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு வரும் மிரட்டலான விவோ போன்.. எந்த மாடல்?

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளது.

4ஜி நானோ சிம்கள், வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத் 5.0, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த விவோ ஒய்27எஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் விவோ ஒய்27எஸ் போனின் விலை IDR 2,399,000 (இந்திய மதிப்பில் ரூ.12,800) ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo V30 Lite with 44W fast charging will be launched soon: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X