ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. 50MP கேமரா.. 80W சார்ஜிங்.. அறிமுகமானது புதிய விவோ போன்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் சத்தமின்றி விவோ வி30 லைட் எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதாவது இந்த போன் ஸனாப்டிராகன் சிப்செட், 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், 50எம்பி கேமரா உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
விவோ வி30 லைட் அம்சங்கள் (Vivo V30 Lite Specs): 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக சிறந்த திரை அனுபவத்தை வழங்கும் இந்த போனின் டிஸ்பிளே.

சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் (Snapdragon 4 Gen 2 SoC) வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ வி30 லைட் ஸ்மார்ட்போன். பின்பு இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
12ஜிபி ரேம் (12ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 256ஜிபி மெமரி வசதியுடன் விவோ வி30 லைட் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி போர்ட்ரெயிட் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ வி30 லைட் ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. அதேபோல் இந்த போனுக்கு IP54 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) வருகிறது.

ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) ஆதரவு கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான விவோ போன். கிரிஸ்டல் பிளாக் மற்றும் லெதர் பர்பிள் நிறங்களில் இந்த விவோ வி30 லைட் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விவோ வி30 லைட் ஸ்மார்ட்போன் ஆனது தற்போது சவூதி அரேபியாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும். பின்பு விவோ வி30 லைட் ஸ்மார்ட்போனின் விலை 1,129 SAR (இந்திய மதிப்பில் ரூ.24,945).


Click it and Unblock the Notifications