அதிர வைக்கும் விலை.. 44W சார்ஜிங்.. 64எம்பி கேமரா.. 256GB மெமரி.. அறிமுகமானது Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் சத்தமில்லாமல் தனது விவோ வி30 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த போன் 64எம்பி கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, பெரிய டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. மேலும் இப்போது விவோ வி30 லைட் 5ஜி போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்ப்போம்.
விவோ வி30 லைட் 5ஜி அம்சங்கள் (Vivo V30 Lite 5G specifications): 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் கர்வ்ட் எட்ஜ் அமோலெட் இ4 (Curved-edge AMOLED e4) டிஸ்பிளே வசதியைக் கொண்டு இந்த விவோ வி30 லைட் 5ஜி வெளிவந்துள்ளது. மேலும் 1080 x 2400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1150 நிட்ஸ் பீக் ப்ரைட்நஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

தரமான ஸ்னாப்டிராகன் 695 ( Snapdragon 695) சிப்செட் வசதியுடன் இந்த விவோ வி30 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஃபன்டச் ஒஸ் 13 ( FunTouch OS 13) சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனாலும் இந்த மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ வி30 லைட் 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த விவோ போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த விவோ வி30 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் விவோ வி30 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இதில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. குறிப்பாக இந்த போன் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவைக் கொண்டுள்ளது.
4800எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த விவோ வி30 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரி சார்ஜ் செய்த 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் இந்த போனுக்கு ஐபி54-ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது.

டூயல் சிம், 5ஜி, வைஃபை, ப்ளூடூத் 5.1, என்எப்சி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான விவோ வி30 லைட் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனின் எடை 190 கிராம் ஆகும். ஃபாரஸ்ட் பிளாக் (Forest Black) மற்றும் ரோஸ் கோல்ட் (Rose Gold) நிறங்களில் இந்த விவோ வி30 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க கிடைக்கும்.
அதேபோல் தற்போது விவோ வி30 லைட் 5ஜி ஆனது மெக்ஸிகோவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. பின்பு விவோ வி30 லைட் 5ஜி போனின் விலை MXN 8,999 (இந்திய மதிப்பில் ரூ.44,110) ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications








