மிரளுது மார்கெட்.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 12GB ரேம்.. OIS கேமரா.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?
கர்வ்ட் டிஸ்பிளே பிரியர்களை தட்டித்தூக்கும் விதமாக 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே மட்டுமல்லாமல், 12ஜிபி ரேம், அட்ரினோ கிராபிக்ஸ், 50எம்பி கேமரா, 80W சார்ஜிங் போன்ற பக்காவான அம்சங்களுடன் விவோ வி30 5ஜி (Vivo V30 5G) போன் வெளியாகி இருக்கிறது.
விவோ வி30 5ஜி அம்சங்கள் (Vivo V30 5G Specifications): இந்த விவோவில் 6.78 இன்ச் (2800 × 1260 பிக்சல்கள்) ஃபுல்எச்டி (FHD) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 3D கர்வ்ட் டிஸ்பிளே (3D Curved Display) மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 2800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

அதோடு எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) மற்றும் 100% டிசிஐ பி3 கலர் காமட் சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த விவோ வி30 போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன.
அதோடு 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட்டும் விற்பனைக்கு வர இருக்கிறது. டூயல் நானோ சிம் (Dual Nano SIM) சிலாட் வருகிறது. இந்த வேரியண்ட்டில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4என்எம் மொபைல் (Qualcomm Snapdragon 7 Gen 3 4nm Mobile) சிப்செட் வருகிறது.
அதோடு ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், ஃபன்டச்ஓஎஸ் 14 (FuntouchOS 14) சப்போர்ட் கொண்டுள்ளது. இந்த விவோ வி30 5ஜி போனில் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது.
50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. அதோடு கலர் டெம்பரேச்சர் (Color Temperature) சப்போர்ட் வருகிறது. ஆரா (Aura) எல்இடி ஃபிளாஷ் கொண்டிருக்கிறது. அதேபோல ஓம்னிவிஷன் ஓவி50ஈ (OmniVision OV50E) சென்சார் கொண்ட 50 எம்பி செல்பீ கேமரா வருகிறது.
இந்த கேமராவில் ஆட்டோ போகஸ் சப்போர்ட் (Autofocus Support) வருகிறது. மெயின் கேமராவில் ஓஐஎஸ் (OIS) சப்போர்ட் வருகிறது. இந்த விவோ வி30 5ஜி போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் IP54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust&Splash Resistant) வருகிறது.
அதேபோல யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் வருகிறது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) சப்போர்ட் வருகிறது.

இந்த போனில் நோபல் பிளாக் (Noble Black), ப்ளூம் ஒயிட் (Bloom White), வேவிங் அக்வா (Waving Aqua) மற்றும் லஷ் கிரீன் (Lush Green) ஆகிய கலர்கள் இருக்கின்றன. இந்த போனின் குளோபல் வேரியண்ட் மட்டும் இப்போது, வெளியாகி இருக்கிறது. இந்தியா உள்பட 30 நாடுகளில் விற்பனைக்கு வருகிறது.
இதன் விலை மற்றும் விற்பனை தேதி குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், பிப்ரவரி 8ஆம் தேதி மெக்சிகோவில் இந்த போன் வெளியாகிறது. ஆகவே, மற்ற நாடுகளிலும் இந்த மாதத்திலேயே இந்த போனை எதிர்பார்க்கலாம். ரூ.30,000 முதல் ரூ.35,000 பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளதாக மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








