சபாஷ்.. சரியான நேரத்தில் தள்ளுபடி அறிவித்த Vivo.. 50எம்பி கேமரா.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?
இன்னும் ஒரு வாரத்தில் விவோ வி40 சீரிஸ் (Vivo V40 Series) போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி இந்த விவோ வி40 சீரிஸ் போன்கள் இந்தியாவில் அறிமுகமாகும். இந்நிலையில் விவோ வி40 சீரிஸ் போன்கள் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு விவோ வி30 5ஜி (Vivo V30 5G) போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம்.
விலைகுறைப்புக்கு பிறகு, 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட விவோ வி30 போனின் விலை ரூ.31,999-ஆக உள்ளது. மேலும் இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.33,999 விலையிலும், 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.35,999 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. விவோ இ-ஸ்டோர், பிளிப்கார்ட் தளங்களில் இந்த போனை வாங்க முடியும்.

விவோ வி30 5ஜி அம்சங்கள் (Vivo V30 5G Specifications): 6.78 இன்ச் ஃபுல்எச்டி (FHD) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்தது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2800 × 1260 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 2800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இது 3D கர்வ்ட் டிஸ்பிளே (3D Curved Display) கொண்டுள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.
இதுதவிர எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) மற்றும் 100% டிசிஐ பி3 கலர் காமட் சப்போர்ட் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.
டூயல் நானோ சிம் (Dual Nano SIM) சிலாட் கொண்டுள்ளது இந்த போன். மேலும் இந்த போனில் சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4என்எம் மொபைல் (Qualcomm Snapdragon 7 Gen 3 4nm Mobile) சிப்செட் உள்ளது. இது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த போன். எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம். மேலும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14) மற்றும் ஃபன்டச்ஓஎஸ் 14 (FuntouchOS 14) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.
50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ வி30 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கலர் டெம்பரேச்சர் (Color Temperature) சப்போர்ட் கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக ஆரா (Aura) எல்இடி ஃபிளாஷ் கொண்டிருக்கிறது இந்த விவோ மாடல். அதேபோல ஓம்னிவிஷன் ஓவி50ஈ (OmniVision OV50E) சென்சார் கொண்ட 50 எம்பி செல்பீ கேமராவும் இதில் உள்ளது.
இந்த செல்பி கேமராவில் ஆட்டோ போகஸ் சப்போர்ட் (Autofocus Support) வருகிறது. மெயின் ரியர் கேமராவில் ஓஐஎஸ் (OIS) சப்போர்ட் வருகிறது. குறிப்பாக விவோ வி30 5ஜி போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் IP54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust&Splash Resistant) உள்ளன.

யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) போன்ற வசதிகள் இந்த போனில் உள்ளன. அதேபோல் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி இந்த போனில் உள்ளது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE)போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.
நோபல் பிளாக் (Noble Black), ப்ளூம் ஒயிட் (Bloom White), வேவிங் அக்வா (Waving Aqua) மற்றும் லஷ் கிரீன் (Lush Green) ஆகிய கலர்கள் இந்த விவோ வி30 5ஜி போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications








