Home
Mobile

மார்க்கெட்டே அதிர போகுது.. 80W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. 256GB மெமரி.. 50MP கேமரா.. எந்த போன்?

விவோ நிறுவனம் தனது புதிய விவோ வி30 5ஜி எனும் ஸ்மார்ட்போனை உலக சந்தை மற்றும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. வளைந்த டிஸ்பிளே, ட்ரிபிள் ரியர் கேமராக்கள், ஆரா லைட் போன்ற அம்சங்களுடன் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக இந்த விவோ வி30 5ஜி ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம். மேலும் இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகள் தற்போது ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

மார்க்கெட்டே அதிர போகுது..  256GB மெமரி.. 50MP கேமரா.. எந்த போன்?

விவோ வி30 5ஜி அம்சங்கள் (Vivo V30 5G specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவுடன் வெளிவரும் விவோ வி30 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இதன் டிஸ்பிளேவில் 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2800×1260 பிக்சல்ஸ்,எச்டிஆர் 10 பிளஸ், 2800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போனின் வலது பக்கத்தில் பவர் பட்டன் மற்றும் வால்யூம் ராக்கர் உள்ளன. அதேபோல் பஞ்ச்-ஹோல் கட்அவுட் டிசைன், வளைந்த டிஸ்பிளே, ஆரா லைட் போன்ற பல்வேறு சிறப்பான வசதிகளுடன் இந்த விவோ வி30 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 7 Gen 3 SoC) வசதியுடன் விவோ வி30 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். குறிப்பாக ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் விவோ வி30 5ஜி அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியுடன் விவோ வி30 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

50எம்பி OmniVision OV50E மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு OmniVision OV08D10கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது விவோ வி30 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இவற்றுள் அடக்கம்.

மார்க்கெட்டே அதிர போகுது..  256GB மெமரி.. 50MP கேமரா.. எந்த போன்?

5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ வி30 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அதேபோல் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் இந்த போன் வெளிவரும்.

5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது விவோ வி30 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கிராம் ஓஷன் ப்ளூ ( Grams Ocean Blue) மற்றும் எலிகண்ட் பிளாக் (Elegant Black) நிறங்களில் விவோ வி30 5ஜி போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் ரூ.30,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo V30 5G global variant specifications leaked online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X