Home
Mobile

ப்ரீ-ஆர்டர் பிச்சிக்குது.. கம்மி பட்ஜெட்ல 3D கர்வ்ட் டிஸ்பிளே.. OIS கேமரா.. 5000mAh பேட்டரி.. யாரு விடுவா?

ஒட்டுமொத்த கர்வ்ட் டிஸ்பிளே பிரியர்களையும் தட்டித்தூக்கும் விதமாக பட்ஜெட் விலையில் 3டி சப்போர்ட்டுடன் விவோ வி29இ (Vivo V29e) போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதோடு, 64 எம்பி ஓஐஎஸ் கேமரா, 44W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களிலும் அசத்துகிறது.

மொபைல் கேமிங் மற்றும் ஓடிடியின் அதீத வளர்ச்சிக்கு பிறகு அமோலெட், கர்வ்ட், டிம்மிங் பிரிகொன்சி போன்ற பிரத்யேக டிஸ்பிளே டெக்னாலஜி கொண்ட போன்களுக்கு வரவேற்பு அதிகரித்துவிட்டது. அதிலும் 3டி கர்வ்ட் டிஸ்பிளே போன்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது. அந்த ஒட்டுமொத்த பட்டாளத்தையும் விவோ நிறுவனம் பட்ஜெட் விலை போன் மூலம் வியக்க வைத்திருக்கிறது.

கம்மி பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. OIS கேமரா.. 5000mAh பேட்டரி.. யாரு விடுவா

விவோ வி29இ அம்சங்கள் (Vivo V29e Specifications): இந்த விவோ மாடல் 6.78 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல் எச்டிபிளஸ் (Full HD+) அமோலெட் (AMOLED ) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு 3டி கர்வ்ட் டிஸ்பிளேவாகும். இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டிசிபி-பி3 (DCI-P3) கலர் காமட் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவோ போன் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கொண்டுள்ளது. ஆகவே, 64 எம்பி (OIS) மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது. அதோடு எல்இடி பிளாஷ் இடம்பெற்றுள்ளது. அதேபோல 50 எம்பி ஏஃஎப் (AF) செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 8என்எம் (Octa Core Snapdragon 695 8nm) சிப்செட் வருகிறது. அதோடு கேமிங் பிரியர்களை கவரும் வகையில் அட்ரினோ 619எல் ஜிபியு (Adreno 619L GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவோ மாடல் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 2 மாடல்களில் விற்பனைக்கு வருகிறது. அதோடு மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. ஹைபிரிட் டூயல் சிம் (Hybrid Dual SIM) மற்றும் மைக்ரோஎஸ்டி கார்ட் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போனில் பெரிதும் பேசப்படும் அம்சமாக 44W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இன்-டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (In-display Fingerprint Scanner), டைப் - சி ஆடியோ மற்றும் சார்ஜிங் போர்ட் வருகிறது. அதோடு ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), ஜிபிஎஸ் (GPS), வை-பை 6 802 (Wi-Fi 6 802) போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த விவோ வி29இ போன் ஆர்டிஸ்டிக் ரெட் (Artistic Red) மற்றும் ஆர்டிஸ்டிக் ப்ளூ (Artistic Blue ) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 26,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் ரூ.28,999ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த போனின் விற்பனை வரும் செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்குகிறது. இருப்பினும், இன்று (ஆகஸ்ட் 28) முதல் பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் விவோ.காம் (Vivo.com) ஆகிய தளங்களில் ப்ரீ-ஆர்டர் செய்து கொள்ள முடியும். இப்போது ப்ரீ-ஆர்டர் செய்வோருக்கு அதிரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

அதாவது, எச்டிஎப்சி (HDFC) மற்றும் எஸ்பிஐ (SBI) கார்டுகளை பயன்படுத்தி ப்ரீ-ஆர்டர் செய்தால், ரூ.2500 உடனடி தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. அதோடு ரூ.2000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. மிட்-ரேஞ்ச் விலையைவிட கம்மியான பட்ஜெட்டில் 3டி கர்வ்ட் டிஸ்பிளே, நல்ல பேட்டரி பேக்கப் மற்றும் சிப்செட் கொண்ட போன் வாங்க வேண்டுமென்றால், இந்த போன் பெஸ்ட் சாய்ஸாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo V29e With 50MP Camera, 5000mAh Battery, Snapdragon 695 Sale From September 7 Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X