Home
Mobile

யோசிக்காம வாங்கலாம்.. 50MP செல்பி கேமரா.. 8GB ரேம்.. பட்ஜெட் விலையில் விவோ போன்.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் தனது புதிய 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது விவோ வி29இ எனும் ஸ்மார்ட்போனை வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த போன் டூயல் ரியர் கேமரா மற்றும் சூப்பரான டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும்.

குறிப்பாக ஆகஸட் 28-ம் தேதி மதியம் 12 மணி அளவில் இந்த போன் வெளியிடப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிளிப்கார்ட் (Flipkart), விவோ.காம் உள்ளிட்ட தளங்களில் இந்த புதிய விவோ வி29இ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏற்கனவே இணையதளங்களில் வெளியான இந்த போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

 50MP செல்பி கேமரா.. 8GB ரேம்.. பட்ஜெட் விலையில் விவோ போன்..

இந்த மாதம் இறுதியில் அறிமுகமாகும் விவோ வி29இ ஸ்மார்ட்போனில் ஃபுல் எச்டி பிளஸ் 3D வளைந்த டிஸ்பிளே வசதி உள்ளது. அதேபோல் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ்,240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே தனித்துவமான அனுபவத்தை வழங்கும்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் (Qualcomm Snapdragon 480 Plus) சிப்செட் வசதியைக் கொண்டு இந்த விவோ வி29இ ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும்.

குறிப்பாக OIS (ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன்) ஆதரவு கொண்ட 64எம்பி பிரைமரி கேமரா+ 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ வி29இ ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

அதேபோல் இந்த போனின் செல்பி கேமரா ஆட்டோ ஃபோகஸ் (Auto Focus) ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த போனின் கேமராக்கள் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டு வெளிவரும் இந்த புத்தம் புதிய விவோ வி29இ ஸ்மார்ட்போன். இந்த போனின் கேமரா பகுதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

இந்த விவோ வி29இ (Vivo V29e) ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபிஃ256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இதில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 50MP செல்பி கேமரா.. 8GB ரேம்.. பட்ஜெட் விலையில் விவோ போன்..

விவோ வி29இ ஸ்மார்ட்போனில் 4600 எம்ஏஎச் பேட்டரி வசதி இடம்பெற்றுள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த பேட்டரி சார்ஜ் செய்ய பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், 5ஜி, 4ஜி வோல்ட்இ, 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது விவோ வி29இ ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போன் சிவப்பு மற்றும் நீல நிறங்களில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒன்பிளஸ் நோர்ட் போன்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் ரூ.25,000 பட்ஜெட்டில் இந்த விவோ வி29இ போன் இந்தியாவில் அறிமுகமாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo V29e smartphone will be launched in India on August 28: check price, specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X