Home
Mobile

கொஞ்சம் பொறுங்க.. 64எம்பி கேமரா, 8ஜிபி ரேம்.. இந்தியாவுக்கு வரும் புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக சிறந்த தரம் வாய்ந்த கேமரா கொண்ட போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது இந்த விவோ நிறுவனம். இந்நிலையில் புதிய விவோ ஸ்மார்ட்போன் ஒன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது விவோ வி29இ 5ஜி (Vivo V29e 5G) எனும் ஸ்மார்ட்போனை தான் விவோ நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் ஆனது இந்த மாதம் இறுதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இணையதளத்தில் வெளியான இந்த போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

64எம்பி கேமரா, 8ஜிபி ரேம்.. இந்தியாவுக்கு வரும் புதிய Vivo 5ஜி போன்..

அதாவது இந்த ஸ்மார்ட்போன் டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் இதில் செல்பி கேமராவுக்கு என்றே பஞ்ச்-ஹோல் கட்அவுட் டிசைன் உள்ளது. இதுதவிர போனின் வலது பக்கம் வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக தரமான வடிவமைப்புடன் இந்த விவோ வி29இ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

குறிப்பாக விவோ வி29இ ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது விவோ ஸ்மார்ட்போன். அதேபோல் 3டி வளைந்த டிஸ்பிளேவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இந்த விவோ வி29இ ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மறறும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். மேலும் இந்த போன் சக்திவாய்ந்த சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் (Snapdragon 480+) சிப்செட் வசதியுடன் இந்த விவோ வி29இ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக கேமிங் வசதிக்குத் தகுந்தபடி இந்த விவோ ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆண்ட்ராய்டு 13 மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்கும். பின்பு இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 64எம்பி டூயல் ரியர் கேமராவுடன் இந்த விவோ வி29இ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் 32எம்பி செல்பி கேமரா, எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன்.

விவோ வி29இ ஸ்மார்ட்போன் ஆனது 4600 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனில் நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். அதாவது இந்த போனில் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. அதேபோல் கருப்பு மற்றும் நீல நிறங்களில் இந்த போன் வெளிவரும்.

குறிப்பாக 5ஜி ஆதரவுடன் இந்த விவோ வி29இ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். பின்பு வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த விவோ வி29இ ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo V29e Smartphone will be launched in India at the end of this August: check specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X