கியூ கட்டி வாங்குவீங்க.. 64எம்பி கேமரா.. 6.7-இன்ச் டிஸ்பிளே.. பட்ஜெட் விலையில் விவோ போன்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் தனது புதிய விவோ வி29இ ஸ்மார்ட்போனை இந்தியாவில் வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த புதிய விவோ வி29இ ஸ்மார்ட்போன் ஆனது ஒன்பிளஸ் போன்களுக்கு போட்டியாக வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஸ்னாப்டிராகன் சிப்செட், பெரிய டிஸ்பிளே, 64எம்பி கேமரா எனப் பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். மேலும் இந்த விவோ வி29இ அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே இதன் விலை மற்று ஸ்டோரேஜ் விவரங்கள் வெளியாகி உள்ளது. இப்போது இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

விலை: ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ.26,999-ஆக உள்ளது. அதேபோல் இதன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ.28,999-ஆக உள்ளது. குறிப்பாக சிவப்பு மற்றும் நீல நிறங்களில் இந்த புதிய விவோ போனை வாங்க முடியும் என்பது
குறிப்பிடத்தக்கது.
விவோ வி29இ 5ஜி (Vivo V29e 5G Specifications): 6.7-இன்ச் அமோலெட் (AMOLED)ஃபுல் எச்டி பிளஸ் 3D வளைந்த டிஸ்பிளே வசதியுடன் விவோ வி29, ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
ஆக்டோ-கோர் 6என்எம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 (octa-core 6nm Snapdragon 695)சிப்செட் வசதியுடன் இந்த விவோ வி29இ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி இந்த போன் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 13 மூலம் இந்த விவோ வி29இ 5ஜி இயங்குகிறது. ஆனால் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரு வேரியண்ட்களில் இந்த விவோ போன் விற்பனைக்கு வரும். அதேபோல் இந்த போனில் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.
5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ வி29இ 5ஜி போன். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் மற்றும் டால்பி ஆடியோ உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.

OIS (ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன்) ஆதரவு கொண்ட 64எம்பி பிரைமரி கேமரா+ 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ வி29இ போன். மேலும் மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும். அதேபோல் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த போன்.
5ஜி, 4ஜி வோல்ட்இ, 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டு விவோ வி29இ 5ஜி போன் வெளிவரும். மேலும் இந்த விவோ வி29இ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது குறைந்த எடையில் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த போன்.


Click it and Unblock the Notifications








