ஒன்பிளஸ் போன்கள் காலி: அதே விலை.. ஆனால் நச்சென்ற அம்சங்கள்.. வருகிறது புதிய விவோ போன்.. என்ன மாடல்?
விவோ நிறுவனம் இந்தியாவில் பிரீமியம் வடிவமைப்பைக் கொண்டிருக்கும் விவோ வி29இ எனும் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது இந்த போனின் டீசரை விவோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் சிவப்பு மற்றும் நீல நிறங்களில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் விவோ வி29இ போனின் இந்திய அறிமுக தேதியை வெளியிடவில்லை விவோ நிறுவனம். ஆனால் இந்த போன் இந்த மாதம் இறுதியில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 3D வளைந்த டிஸ்பிளே, பளபளப்பான பின்புற பேனல், டூயல் ரியர் கேமரா, கேமரா லென்ஸைச் சுற்றி தங்க நிற வளையம், வலது பக்கத்தில் வால்யூம் கீ மற்றும் பவர் பட்டன் என்று பல அசத்தலான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த விவோ வி29இ போன். மேலும் இந்த போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

OIS (ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன்) ஆதரவு கொண்ட 64எம்பி பிரைமரி கேமரா+ 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ வி29இ ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
குறிப்பாக இந்த போனின் செல்பி கேமரா ஆட்டோ ஃபோகஸ் (Auto Focus) ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த போனின் கேமராக்கள் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டு வெளிவரும் இந்த புத்தம் புதிய விவோ வி29இ ஸ்மார்ட்போன்.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ வி29இ (Vivo V29e) ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இதில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் (Qualcomm Snapdragon 480 Plus) சிப்செட் வசதியைக் கொண்டு இந்த விவோ வி29இ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். குறிப்பாக மீடியாடெக் சிப்செட் விட இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் மிகவும் சக்திவாய்ந்தது. எனவே இந்த விவோ வி29இ போனை நம்பி வாங்கலாம். மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த விவோ வி29இ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும்.
விவோ வி29இ ஸ்மார்ட்போனில் ஃபுல் எச்டி பிளஸ் 3D வளைந்த டிஸ்பிளே வசதி உள்ளது. அதேபோல் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே பகுதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

4600 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ வி29இ ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த பேட்டரி சார்ஜ் செய்ய பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அதேபோல் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், 5ஜி, 4ஜி வோல்ட்இ, 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த போன். மேலும் இந்த விவோ வி29இ போன் ரூ.25,000 விலையில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஒன்பிளஸ் நோர்ட் போன்கள் இந்தியாவில் ரூ.25,000 பட்ஜெட்டில் தான் கிடைக்கிறது. ஆனால் அந்த போன்களை விட தரமான வடிவமைப்பு மற்றும் தனித்துவமான அம்சங்களுடன் இந்த விவோ வி29இ போன் வெளிவரும் என்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








