ஒத்த கால்ல நின்னாலும் உடனே கிடைக்காது.. 50MP செல்பி கேமரா.. 8ஜிபி ரேம் கொண்ட புது Vivo போன்.. எந்த மாடல்?
ஒன்பிளஸ், சியோமி நிறுவனங்கள் போன்று விவோ நிறுவனமும் போன்களின் வடிவமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. குறிப்பாக விவோ நிறுவனம் இந்தியாவில் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான கேமரா வசதி எனப் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் போன்களை அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வரிசையில் மீண்டும் ஒரு அசத்தலான வடிவமைப்பைக் கொண்ட விவோ போன் இந்தியாவில் வெளிவர இருக்கிறது. அதாவது விவோ வி29இ 5ஜி எனும் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி மதியம் 12 மணி அளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த புதிய போனை பிளிப்கார்ட், விவோ.காம் உள்ளிட்ட தளங்களில் வாங்க முடியும்.

குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த அசத்தலான விவோ போன். மேலும் இந்த போன் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே இதன் அம்சங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. இப்போது விவோ வி29இ 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
விவோ வி29இ 5ஜி (Vivo V29e 5G Specifications): ஆக்டோ-கோர் 6என்எம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 (octa-core 6nm Snapdragon 695) சிப்செட் வசதியுடன் இந்த விவோ வி29இ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி இந்த போன் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 13 மூலம் இந்த விவோ வி29இ 5ஜி இயங்குகிறது. ஆனால் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரு வேரியண்ட்களில் இந்த விவோ போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ வி29இ 5ஜி போன். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
OIS (ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன்) ஆதரவு கொண்ட 64எம்பி பிரைமரி கேமரா+ 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ வி29இ ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா வசதி இந்த போனில் உள்ளது.
இந்த போனின் செல்பி கேமரா ஆட்டோ ஃபோகஸ் (Auto Focus)ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே இந்த போனின் கேமராக்கள் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ வி29இ 5ஜி போன்.

இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், 5ஜி, 4ஜி வோல்ட்இ, 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டு விவோ வி29இ 5ஜி போன் வெளிவரும். குறிப்பாக சிவப்பு மற்றும் நீல நிறங்களில் இந்த புதிய விவோ போனை வாங்க முடியும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவோ வி29இ 5ஜி போன் ஆனது ரூ.25,000 முதல் ரூ.30,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போன் அசத்தலான வடிவமைப்புடன் வெளிவரும் என்பதால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








