கண்ணா இது எப்படி இருக்கு.. 50எம்பி OIS கேமரா.. 80W ஃபாஸ்ட் சார்ஜிங்.. Vivo-வின் புதிய செல்பீ எக்ஸ்பெர்ட் போன்!
உலக சந்தையில் விவோ நிறுவனம் தனது பிரமாண்ட புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது விரைவில் விவோ நிறுவனம் தனது விவோ வி29 5ஜி (Vivo V29 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போனின் டீசர் தற்போது வெளிவந்துள்ளது.
குறிப்பாக டூயல் ரியர் கேமரா, பெரிய டிஸ்பிளே மற்றும் அசத்தலான வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த விவோ வி29 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த விவோ வி29 5ஜி போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் இந்த விவோ வி29 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ்,240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், இன்-டிஸபிளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த விவோ வி29 5ஜி போன் அறிமுகமாகும்.
50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த விவோ வி29 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவுடன் இந்த புதிய விவோ போன் அறிமுகமாகும்.
குறிப்பாக செல்பி கேமராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது விவோ நிறுவனம். எனவே போனின் உதவியுடன் தரமான செல்பி படங்களை எடுக்க முடியும்.அதேபோல் விவோ வி29 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778 பிளஸ் சிப்செட் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். குறிப்பாக கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். அதாவது தரமான கேமிங் அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும்.
8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த விவோ வி29 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த இந்த போனில் ஒரு எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது. குறிப்பாக ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த விவோ வி29 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும்.

4600 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த விவோ வி29 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த போனில் நீண்ட நேரம் கேம் விளையாடலாம். அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 80 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த விவோ வி29 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும்.
குறிப்பாக 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த விவோ வி29 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதேபோல் இந்த போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக உலகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








