அக்டோபர் 4.. 50எம்பி கேமரா.. AMOLED டிஸ்பிளே.. இந்தியாவுக்கு வரும் விவோ போன்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் தனது விவோ வி29 சீரிஸ் (Vivo V29 Series) போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. மேலும் இந்த புதிய போன்களின் டீசரை விவோ நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதேபோல் ஆன்லைனில் வெளியான தகவலின்படி, இந்த விவோ வி29 சீரிஸ் வரும் அக்டோபர் 4-ம் தேதி அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக விவோ வி29 5ஜி மற்றும் விவோ வி29 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்கள் தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதேபோல் இதில் விவோ வி29 5ஜி ஸ்மார்ட்போன் ஏற்கனவே உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ஹிமாலயன் ப்ளூ, மெஜஸ்டிக் ரெட் மற்றும் ஸ்பேஸ் பிளாக் உள்ளிட்ட நிறங்களில் இந்த புதிய விவோ போன்கள் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ வி29 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.
விவோ வி29 5ஜி (Vivo V29 5G) ஸ்மார்ட்போன் ஆனது 6.78-இன்ச் ஃபுல் எச்டி AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, எச்டிஆர் 10 ஆதரவு, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதன் டிஸ்பிளே பகுதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.
ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 778ஜி (Snapdragon 778G) 6என்எம் சிப்செட் வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த விவோ வி29 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் அட்ரினோ 642எல் ஜிபியு (Adreno 642L GPU) ஆதரவு உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
Funtouch OS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதள வசதியுடன் இந்த விவோ வி29 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியை அடிப்படையாகக் கொண்ட இந்த விவோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இந்த போனில் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் உள்ளன.
50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான போன்.

தூசி மற்றும் நீர் எதிர்ப்பு ஆதரவுக்கு என ஐபி68 சான்றிதழ் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போனின் எடை 186 கிராம் ஆகும். மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏசி, புளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது விவோ வி29 5ஜி.
அதேபோல் விவோ வி29 ப்ரோ 5ஜி ( Vivo V29 Pro 5G) ஸ்மார்ட்போன் மாடலும் பெரிய டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் சிப்செட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த புதிய விவோ போன்கள் இந்திய சந்தையில் ரூ.40,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








