ஆபர் விலையில் விற்பனை ஆரம்பம்.. ஆர்டர் அள்ளுது.. 80W பிளாஷ் சார்ஜ், 50MP OIS நைட் கேமரா, 12GB ரேம்! என்ன போன்?
இந்தியாவில் விவோவின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களாக விவோ வி29 (Vivo V29) மற்றும் விவோ வி29 ப்ரோ (Vivo V29 Pro) அறிமுகம் செய்யப்பட்டன. இவ்விரு போன்களில் ப்ரோ மாடல் மட்டுமே விற்பனைக்கு வந்த நிலைப்பாட்டில் வெண்ணிலா மாடலின் விற்பனையும் தொடங்கி உள்ளது.
80வாட் ஃபிளாஷ் சார்ஜ், 50எம்பி ஓஐஎஸ் நைட் கேமரா, 12 ஜிபி ரேம் போன்ற முக்கிய அம்சங்களுடன் வரும் விவோ வி29 ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் என்ன? என்னென்ன அறிமுக சலுகைகள் கிடைக்கிறது? என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:

விவோ வி29 அம்சங்கள்: இது எச்டிஆர்10 பிளஸ் (HDR10+), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் மெலிதான பெஸல்களை (Slim Bezels) கொண்ட 6.78-இன்ச் கர்வ்டு டிஸ்பிளேவை (Curved Display) கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 778ஜி (Octa-core Qualcomm Snapdragon 778G ) சிப்செட்டுடன் வருகிறது.
12 ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256 ஜிபி வரையிலான இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் விவோ வி29 ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு 13 ஆப்ரேட்டிங் சிஸ்டமை (Android 13 OS) அடிப்படையாக கொண்ட விவோவின் தனிப்பயனாக்கப்பட்ட ஃபன்டச் ஓஎஸ் 13 (FunTouch OS 13) கொண்டு இயக்கப்படுகிறது.
கேமராக்களை பொறுத்தவரை, விவோ வி29 ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் (Triple Rear Camera Setup) உள்ளது. மெயின் கேமராவை பொறுத்தவரை, இதில் 50எம்பி ஓஐஎஸ் நைட் கேமராவை (50MP OIS Night Camera) கொண்டுள்ளது. விவோ நிறுவனத்தின் கூற்றுப்படி இந்த நைட் கேமராவானது சிக்கலான விவரங்களை திறம்பட படம்பிடிக்கிறது.
இரண்டாம் நிலை கேமராவை பொறுத்தவரை விவோ வி29 ஸ்மார்ட்போனில் 8எம்பி வைட் ஆங்கிள் கேமரா (8MP Wide Angle Camera) உள்ளது. கடைசியாக இதில் 2எம்பி போக்கே கேமராவும் (Bokeh Camera) உள்ளது. முன்பக்க கேமராவை பொறுத்தவரை, 50எம்பி ஐ ஏஎஃப் செல்பீ கேமராவை (50MP Eye AF Selfie Camera) கொண்டுள்ளது.
பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங்கை பொறுத்தவரை, விவோ வி29 ஸ்மார்ட்போனில் 4600எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது. இது 80வாட் பிளாஷ்சார்ஜ் தொழில்நுட்பத்தை (80W FlashCharge Technology) ஆதரிக்கிறது. விவோ நிறுவனத்தின் கூற்றுப்படி, கூடுதல் பாதுகாப்பிற்காக 24-டைமன்ஷன் சார்ஜிங் செக்யூரிட்டி ப்ரொடெக்ஷனை (24-dimension charging security protection) கொண்டுள்ளது.
விவோ வி29 விலை மற்றும் விற்பனை: இந்தியாவில் இது 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது: 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ். இவைகள் முறையே ரூ.32,999 மற்றும் ரூ.36,999 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது.
ஸ்பேஸ் பிளாக் (Space Black), ஹிமாலயன் ப்ளூ (Himalayan Blue), மெஜெஸ்டிக் ரெட் (Majestic Red) என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் வெளியாகியுள்ள விவோ வி29 ஸ்மார்ட்போன் ஆனது பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart), பார்ட்னர் ரீடெய்ல் ஸ்டோர்கள் மற்றும் நிறுவனத்தின் சொந்த இ-ஸ்டோர் வழியாக விற்பனை செய்யப்படுகிறது.
விவோ வி29 மீதான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்: விவோ வி29 ஸ்மார்ட்போன் ஆனது மாதத்திற்கு ரூ.2,749 என்ற விகிதத்தில் 12 மாதங்களுக்கான நோ-காஸ்ட் இஎம்ஐ (No Cost EMI) விருப்பத்தின் கீழ் வாங்க கிடைக்கிறது. மேலும் ரூ.4,000 வரையிலான அப்கிரேட் போனஸ் (Upgrade Bonus) ஆக 10% வரையிலான கேஷ்பேக்கும் கிடைக்கும். மேலும் விவோ வி29 ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு விவோ வி-ஷீல்ட் (Vivo V-Sheild) திட்டங்களில் 40% வரை தள்ளுபடியும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








