Home
Mobile

இன்னும் 1 வருஷம் ஆகும்னு நினைச்சுட்டு இருந்தோம்.! இவ்ளோ சீக்கிரமே Vivo வி29 ப்ரோ 5ஜி அறிமுகமாக போகுதா!

விவோ நிறுவனம் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. அதாவது தரமான கேமரா, தனித்துவமான மென்பொருள் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்நிறுவனம் போன்களை அறிமுகம் செய்கிறது. எனவே தான் இந்நிறுவனத்தின் போன்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் விவோ நிறுவனம் விரைவில் விவோ வி29 ப்ரோ (Vivo V29 Pro) எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய போன் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த போனின் மாடல் எண் V2251 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் 1 வருஷம் ஆகும்னு நினைச்சுட்டு இருந்தோம்..

இப்போது ஆன்லைனில் கசிந்த விவோ வி29 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது விவோ வி29 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 8200 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த போன் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு கேமிங் பயனர்கள் இந்த விவோ வி29 ப்ரோ ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

அதாவது கேமிங் அம்சங்களுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போனில் சிப்செட் இடம்பெற்றுள்ளது. அதேபோல் இந்த போன் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் கொண்டு இந்த புதிய விவோ வி29 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

விவோ வி29 ப்ரோ ஸ்மார்ட்போன் 64எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே இந்த போன் 50எம்பி கேமராவுடன் வெளிவரும். அதேபோல் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.

விவோ வி29 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 66 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டு வெளிவரும் இந்த போன். எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் 1 வருஷம் ஆகும்னு நினைச்சுட்டு இருந்தோம்..

அதேபோல் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த விவோ வி29 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த விவோ வி29 ப்ரோ ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த விவோ வி29 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் இந்த விவோ வி29 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போன் இந்தியச் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo V29 Pro phone to launch soon with Dimensity 8200 chipset:Check Specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X