Home
Mobile

அவசரப்பட்டு வேற போன் வாங்கிடாதீங்க.. 50எம்பி செல்பி கேமரா.. இந்தியாவுக்கு வரும் Vivo போன்.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் தனது விவோ வி29 மற்றும் விவோ வி29 ப்ரோ மாடல்களை இந்த (செப்டம்பர்) மாதம் இறுதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் தான் உலக சந்தையில் விவோ வி29 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

குறிப்பாக இந்த விவோ வி29 மற்றும் விவோ வி29 ப்ரோ மாடல்கள் இந்தியாவில் ரூ.35,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும் ஏற்கனவே உலக சந்தையில் அறிமுகமான விவோ வி29 போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

50எம்பி செல்பி கேமரா.. இந்தியாவுக்கு வரும் Vivo போன்.. எந்த மாடல்?

விவோ வி29 5ஜி அம்சங்கள்: விவோ வி29 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.78-இன்ச் ஃபுல் எச்டி AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, எச்டிஆர் 10 ஆதரவு, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதன் வளைந்த டிஸ்பிளே ஒரு தனித்துவமான அனுபவத்தைக் கொடுக்கும்.

ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 778ஜி 6என்எம் சிப்செட் வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த விவோ வி29 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் அட்ரினோ 642எல் ஜிபியு ஆதரவு உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக கேமிங் வசதிகளுக்கு இந்த ஸ்மார்ட்போன் அருமையாகப் பயன்படும்.

Funtouch OS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த விவோ வி29 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியை அடிப்படையாக கொண்ட இந்த விவோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான போன்.

இந்த போனில் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் உள்ளன. மேலும் தூசி மற்றும் நீர் எதிர்ப்பு ஆதரவுக்கு என ஐபி68 சான்றிதழ் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போனின் எடை 186 கிராம் ஆகும். மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏசி, புளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது விவோ வி29 5ஜி.

50எம்பி செல்பி கேமரா.. இந்தியாவுக்கு வரும் Vivo போன்.. எந்த மாடல்?

4600 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ வி29 5ஜி ஸ்மார்ட்போன். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 80 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். எனவே இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும்.

அதேபோல் விவோ வி29 5ஜி ஸ்மார்ட்போன் உடன் வரும் விவோ வி29 ப்ரோ பிரீமியம் வடிவமைப்பில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விவோ வி29 ப்ரோ மாடலில் ஸ்னாப்டிராகன் சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo V29 Pro and Vivo V29 will be launched in India by the end of September: check details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X