மிட்-ரேன்ஞ் விலையில் இந்தியாவில் களமிறங்கும் புதிய விவோ 5ஜி போன்.! அறிமுகம் எப்போது தெரியுமா?
விவோ நிறுவனம் தனது புதிய விவோ வி29 5ஜி ஸ்மார்ட்போனை அடுத்த மாதம் துவத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய போன் தரமான அம்சங்களுடன் மிட்-ரேன்ஞ் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த விவோ வி29 5ஜி போனின் அம்சங்களைப் பார்ப்போம்.
விவோ வி29 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே ஒரு தனித்துவமான திரை அனுபவத்தைக் கொடுக்கும்.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த அட்டகாசமான விவோ வி29 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மர்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.
விவோ வி29 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் குறிப்பாக கேமிங் பயனர்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் அருமையாகப் பயன்படும். பின்பு அட்ரினோ ஜிபியு ஆதரவுடன் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு விவோ வி29 லைட் 5ஜி 5ஜி போன் வெளிவரும்.
விவோ வி29 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 64எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் வெளிவரும் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன்.
5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ வி29 லைட் 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 44 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும்.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளன இந்த விவோ வி29 லைட் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் குறைந்த எடையுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்த போன் 177 கிராம் எடையில் அறிமுகமாகும் என்று விவோ நிறுவனம் கூறியுள்ளது. குறிப்பாக தரமான சிப்செட், அருமையான கேமராக்கள், பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








