அடேங்கப்பா.. இப்படியொரு அசத்தலான போன் வாங்க வெயிட் பண்ணலாம்.! நல்ல செய்தி சொன்ன Vivo.!
விவோ நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போனுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக சிறந்த தரமான கேமரா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது இந்த விவோ நிறுவனம் தான். இந்நிலையில் விவோ நிறுவனம் புதிய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.
அதாவது விவோ நிறுவனம் விவோ வி29 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை தான் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய விவோ 5ஜி போன் ஆனது அடுத்த மாதம் துவக்கத்தில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக தரமான சிப்செட் மற்றும் அருமையான கேமரா வசதியுடன் இந்த புதிய விவோ போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் கசிந்த விவோ வி29 லைட் 5ஜி போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

விவோ வி29 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த போன் பெரிய டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த அட்டகாசமான விவோ வி29 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மர்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.
விவோ வி29 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் குறிப்பாக கேமிங் பயனர்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் அருமையாகப் பயன்படும். பின்பு அட்ரினோ ஜிபியு ஆதரவுடன் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு விவோ வி29 லைட் 5ஜி 5ஜி போன் வெளிவரும்.
விவோ வி29 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 64எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் வெளிவரும் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன்.
5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ வி29 லைட் 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 44 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும்.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளன இந்த விவோ வி29 லைட் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் குறைந்த எடையுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








