Home
Mobile

அதிரவிடும் பட்ஜெட்.. 80W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 50MP செல்பி கேமரா.. இந்தியாவுக்கு வரும் விவோ போன்.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் தனது புதிய விவோ வி29 (Vivo V29) மற்றும் விவோ வி29 ப்ரோ (Vivo V29 Pro) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த செப்டம்பர் மாதம் இறுதியில் விவோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் விவோ வி29 ஸ்மார்ட்போன் ஆனது ஏற்கனவே உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் விவோ வி29 மற்றும் விவோ வி29 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் விலைப் பற்றிய தகவல் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. அதன்படி இந்த விவோ வி29 மற்றும் விவோ வி29 ப்ரோ போன்கள் இந்தியாவில் ரூ.40,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

50MP செல்பி கேமரா.. இந்தியாவுக்கு வரும் விவோ போன்.. எந்த மாடல்?

குறிப்பாக இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஏற்கனவே உலக சந்தையில் அறிமுகமான விவோ வி29 ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 778ஜி 6என்எம் சிப்செட் வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த விவோ வி29 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் அட்ரினோ 642எல் ஜிபியு ஆதரவு உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக கேமிங் வசதிகளுக்கு இந்த ஸ்மார்ட்போன் அருமையாகப் பயன்படும்.

விவோ வி29 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.78-இன்ச் ஃபுல் எச்டி AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, எச்டிஆர் 10 ஆதரவு, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதன் வளைந்த டிஸ்பிளே ஒரு தனித்துவமான அனுபவத்தைக் கொடுக்கும்.

Funtouch OS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த விவோ வி29 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியை அடிப்படையாகக் கொண்ட இந்த விவோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான போன்.

50MP செல்பி கேமரா.. இந்தியாவுக்கு வரும் விவோ போன்.. எந்த மாடல்?

யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் உள்ளன. மேலும் தூசி மற்றும் நீர் எதிர்ப்பு ஆதரவுக்கு என ஐபி68 சான்றிதழ் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போனின் எடை 186 கிராம் ஆகும். 4600 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ வி29 5ஜி ஸ்மார்ட்போன். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 80 வாட்ஸ் ஃபாஸ்ட்சார்ஜிங் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏசி, புளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது விவோ வி29 5ஜி. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது. அதேசமயம் விவோ வி29 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்கள் வெளியிடப்படவில்லை. மேலும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo V29 and Vivo V29 Pro Indian Price Leaked Online:: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X