50எம்பி செல்பி கேமரா.. 80W ஃபாஸ்ட் சார்ஜிங்.. இந்தியாவுக்கு வரும் புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் 5ஜி ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் விவோ நிறுவனம் ஒரு அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
அதாவது சமீபத்தில் ஐரோப்பாவில் விவோ வி29 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இதே விவோ வி29 5ஜி ஸ்மார்ட்போன் தான் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது பிஐஎஸ் (BIS) சான்றிதழ் இணையதளத்தில் இந்த காணப்பட்டுள்ளது. எனவே இந்த போன் வரும் ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் இந்த விவோ வி29 5ஜி போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

விவோ வி29 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.78-இன்ச் ஃபுல் எச்டி AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, எச்டிஆர் 10 ஆதரவு, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போன் சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.
அதேபோல் Funtouch OS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த விவோ வி29 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியை அடிப்படையாக கொண்ட இந்த விவோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விவோ வி29 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது . எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான போன்.
குறிப்பாக எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய விவோ வி29 5ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த போனில் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் உள்ளன. மேலும் தூசி மற்றும் நீர் எதிர்ப்பு ஆதரவுக்கு என ஐபி68 சான்றிதழ் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போனின் எடை 186 கிராம் ஆகும். மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏசி, புளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
அதாவது ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 778ஜி 6என்எம் சிப்செட் வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த விவோ வி29 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் அட்ரினோ 642எல் ஜிபியு ஆதரவு உள்ளது. எனவே இந்த போன் மேம்பட்ட செயல்திறன் மற்றும் வேகம் வழங்கும். குறிப்பாக கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

விவோ வி29 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 4600 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 80 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். எனவே இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் வெளியான தகவலின்படி இந்தியாவில் ரூ.30,000-க்கு கீழ் இந்த விவோ வி29 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். அதேபோல் இந்த போனுக்கு ஐரோப்பாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே இந்தியாவிலும் இந்த புதிய விவோ போனுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








