50எம்பி செல்பி கேமரா.. பட்ஜெட் விலை.. இந்தியாவில் களமிறங்கும் புதிய Vivo 5ஜி போன்.!
விவோ நிறுவனம் அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துவருகிறது. அதுவும் மற்று ஸ்மார்ட்போன்களை விட விவோ ஸ்மார்ட்போன்கள் தரமான கேமரா வசதியுடன் வெளிவருவதால் அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் விவோ நிறுவனம் மீண்டும் தரமான கேமரா வசதியுடன் ஒரு அசத்தலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.
அதாவது விவோ நிறுவனம் வி29 5ஜி ஸ்மார்ட்போனை தான் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. சமீபத்தில் இந்த போனின் டீசர் வெளியானது. அதாவது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட வசதிகளுடன் இந்த விவோ வி29 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இணையத்தில் கசிந்த இந்த விவோ போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

விவோ வி29 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வாட்டர் டிராப் நாட்ச் டிஸபிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இந்த போனின் வலதுபுறம் பவர் பட்டன் வால்யூம் பட்டன்கள் உள்ளன. அதேபோல் இந்த போன் நீல நிறத்தில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ட்ரிப்பிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய விவோ போன்.
இந்த விவோ வி29 5ஜி ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், இன்-டிஸபிளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய விவோ போன் வெளிவரும்.
50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் விவோ வி29 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். இதுதவிர விவோ வி29 5ஜி போனின் கேமராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதாவது விவோ வி29 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி செல்பி கேமராவுடன் அறிமுகமாகும். பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களுடன் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் கேமரா வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.
மீடியாடெக் டைமன்சிட்டி 8200 (MediaTek Dimensity 8200) சிப்செட் வசதியுடன் இந்த விவோ வி29 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். பின்பு FuntouchOS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த புதிய விவோ போன்.
குறிப்பாக 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த விவோ வி29 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த இந்த போனில் ஒரு எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது. குறிப்பாக ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த விவோ வி29 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும்.

அதேபோல் 4505 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த விவோ வி29 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த போனில் நீண்ட நேரம் கேம் விளையாடலாம். அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 80 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த விவோ வி29 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும்.
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த விவோ வி29 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் ஆனது படஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








