Home
Mobile

இவ்ளோ கம்மி விலைக்கு கர்வ்டு டிஸ்பிளே.. ஆட்டோ ஃபோகஸ் கேமரா.. IP68 ரேட்டிங்-ஆ.. என்ன போன்? என்ன விலை?

விவோ நிறுவனம் புதிய விவோ விவோ வி29 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதாவது இந்த போன் தற்போது ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த விவோ வி29 5ஜி போன் இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக இந்த விவோ வி29 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் சிப்செட், கர்வ்டு டிஸ்பிளே (வளைந்த டிஸ்பிளே), 50எம்பி கேமரா, பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

Vivo V29 5G:  கம்மி விலையில் கர்வ்டு டிஸ்பிளே, ஆட்டோ ஃபோகஸ் கேமரா!

விவோ வி29 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.78-இன்ச் ஃபுல் எச்டி AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, எச்டிஆர் 10 ஆதரவு, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதன் வளைந்த டிஸ்பிளே ஒரு தனித்துவமான அனுபவத்தைக் கொடுக்கும்.

ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 778ஜி 6என்எம் சிப்செட் வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த விவோ வி29 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் அட்ரினோ 642எல் ஜிபியு ஆதரவு உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக கேமிங் வசதிகளுக்கு இந்த ஸ்மார்ட்போன் அருமையாகப் பயன்படும்.

Funtouch OS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த விவோ வி29 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியை அடிப்படையாக கொண்ட இந்த விவோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான போன்.

இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய விவோ வி29 5ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த போனில் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் உள்ளன. மேலும் தூசி மற்றும் நீர் எதிர்ப்பு ஆதரவுக்கு என ஐபி68 சான்றிதழ் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

4600 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ வி29 5ஜி ஸ்மார்ட்போன். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 80 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். எனவே இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும்.

Vivo V29 5G:  கம்மி விலையில் கர்வ்டு டிஸ்பிளே, ஆட்டோ ஃபோகஸ் கேமரா!

குறிப்பாக இந்த போனின் எடை 186 கிராம் ஆகும். மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏசி, புளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஐரோப்பாவில் விவோ வி29 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது USD 550 (இந்திய மதிப்பில் ரூ.45,445) விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த போன் இந்தியாவில் ரூ.30,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன்களை வாங்குவதை விட இந்த விவோ வி29 5ஜி போனை வாங்குவது மிகவும் நல்லது. குறிப்பாக இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த விவோ வி29 5ஜி போன். மேலும் ஆகஸ்ட் 15-ம் தேதி சில நாடுகளில் மட்டும் இந்த போன் விற்பனைக்கு வரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo V29 5G phone launched with Snapdragon 778G, 50MP selfie camera:Check price, specification, and features : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X