அதகள மாடல்.. AURA எல்இடி.. 12GB ரேம்.. SONY கேமரா.. 80W சார்ஜிங்.. 4600mAh பேட்டரி.. எந்த போன்?
மிட்-ரேஞ்ச் விலையில் சோனி கேமரா, ஆரா லைட்னிங், 12ஜிபி ரேம், 80W ஃபாஸ்ட் சார்ஜிங், 4600mAh பேட்டரி போன்ற பக்கா பிரீமியம் அம்சங்களுடன் விவோ வி29 (Vivo V29) போன் விற்பனைக்கு வரவிருக்கிறது. இந்த போனின் அறிமுக தேதி, முழு அம்சங்கள் இதோ.
விவோ வி29 அம்சங்கள் (Vivo V29 Specifications): இந்த போன் 6.78 இன்ச் (2800×1260 பிக்சல்கள்) ஃபுல்எச்டி (Full HD) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. அதோடு, எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் 100% டிசிஐ-பி3 காலர் காமட் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 778ஜி 6என்எம் (Octa Core Snapdragon 778G 6nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 642எல் ஜிபியு (Adreno 642L GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. ஆண்ட்ராய்டு 13 (Android 13) மற்றும் ஃபன்டச் ஓஎஸ் 13 (Funtouch OS 13) கொண்டிருக்கிறது.
இந்த விவோ மாடலில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்கள் உள்ளன. டூயல் நானோ சிம் சிலாட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது.
ஆகவே, சோனி ஐஎம்எக்ஸ்663 (Sony IMX663) சென்சாருடன் கூடிய 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. அதோடு ஆரா லைட் (Aura Light) இடம்பெற்றுள்ளது. இதுவொரு ஓஐஎஸ் (OIS) கேமராவாகும்.
இதில் வெட்டிங் ஸ்டைல் போர்ட்ராய்டு (Wedding Style Portrait), வார்ம் லைட் போர்ட்ராய்டு (Warm Light Portrait) போன்ற பல்வேறு பிரத்யேக மோட்கள் வருகின்றன. அதே போல 50 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இதில் ஆட்டோ போகஸ் (Autofocus) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவோ போனில் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4600mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரியோடு சேர்த்து 186 கிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display fingerprint sensor) வருகிறது. டைப்-சி ஆடியோ (Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் வருகிறது.
இந்த விவோ வி29 மாடலில் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்டிருக்கிறது. மேலும், 5ஜி என்எஸ்ஏ (5G NSA), டூயல் 4ஜி வோஎல்இடி (Dual 4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 6 802), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஜிபிஎஸ் (GPS) மற்றும் என்ஃஎப்சி (NFC) போன்ற அம்சங்கள் வருகின்றன.
இந்த விவோ வி29 போன் இமாலயன் ப்ளூ (HIMALAYAN BLUE), மெஜஸ்டிக் ரெட் (MAJESTIC RED) மற்றும் ஸ்பேஸ் பிளாக் (SPACE BLACK) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்தியாவில் வரும் அக்டோபர் 4ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதோடு விவோ வி29 ப்ரோ (Vivo V29 Pro) மாடலும் வெளியாகிறது.
இந்த போன்களின் விலை குறித்த விவரங்கள் அறிமுகத்தின் போதே தெரியவரும். இருப்பினும், இந்த அம்சங்களை வைத்து பார்க்கும்போது, ரூ.28,000 முதல் ரூ.30,000 பட்ஜெட்டில் விலை நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது. அதேபோல ப்ரோ மாடல் ரூ.35,000 பட்ஜெட்டில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது. இந்த போன் பிரம்மாண்ட கேமரா செட்டப் கொண்டிருப்பதால், நல்ல வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








