Home
Mobile

முக்கியமான வசதி ஒன்று இல்லாமல் அறிமுகமான புதிய Vivo போன்.! என்னம்மா இப்படி பண்றீங்களேமா?

விவோ நிறுவனம் இந்தியாவில் விவோ வி27 மற்றும் விவோ 27 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. தற்போது இந்நிறுவனம் விவோ வி27இ எனும் ஸ்மார்ட்போனை மாடலையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது மலேசியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் இந்த விவோ வி27இ ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த புதிய விவோ போன் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது விவோ வி27 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

முக்கியமான வசதி ஒன்று இல்லாமல் அறிமுகமான புதிய Vivo போன்.!

விவோ வி27இ அம்சங்கள்

விவோ வி27இ ஸ்மார்ட்போன் ஆனது 6.62-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ்AMOLED டிஸ்பிளே வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 2400 ×1080 பிக்சல், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த விவோ ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் உடன் ARM Mali-G57 MC2 GPU ஆதரவைக் கொண்டுள்ளது விவோ வி27இ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு அருமையாக இருக்கும். குறிப்பாக கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் Funtouch OS சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

முக்கியமான வசதி ஒன்று இல்லாமல் அறிமுகமான புதிய Vivo போன்.!

குறிப்பாக 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான விவோ வி27இ ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த புதிய போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

64எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ வி27இ ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய போன். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த விவோ போன்.

முக்கியமான வசதி ஒன்று இல்லாமல் அறிமுகமான புதிய Vivo போன்.!

4600 எம்ஏஎச் பேட்டரி வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த விவோ வி27இ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும் என நிறுவனம் கூறுகிறது. பின்பு 66 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புதிய போன்.

இந்த விவோ வி27இ ஸ்மார்ட்போனில் அனைத்து சிறப்பு அம்சங்களும் உள்ளன. ஆனால் முக்கியமான வசதி ஒன்று இல்லை. அதாவது இந்த போனில் 5ஜி வசதி கிடையாது. அதாவது 4ஜி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக 4ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத், என்எப்சி, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த விவோ போன்.

முக்கியமான வசதி ஒன்று இல்லாமல் அறிமுகமான புதிய Vivo போன்.!

விவோ வி27இ விலை

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட விவோ வி27இ போனின் ஆரம்ப விலை RM 1,299 (இந்திய மதிப்பில் ரூ.23,970) ஆக உள்ளது. குறிப்பாக இந்த போன் லாவெண்டர் பர்பிள், குளோரி பிளாக் மற்றும் லைவ்லி க்ரீன் போன்ற நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo V27e With 66W fast charging Launched: Price, Specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X