Home
Mobile

50எம்பி செல்பி கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமாகும் Vivo வி27 ப்ரோ: அறிமுக தேதி இதுதான்.!

விவோ நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் விவோ நிறுவனம் இந்தியச் சந்தையில் விவோ வி27 ப்ரோ எனும் அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது.

அறிமுகம் எப்போது

குறிப்பாக விவோ நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள புதிய விவோ வி27 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் சிறந்த மென்பொருள் வசதி மற்றும் அட்டகாசமான கேமரா வசதியுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் வரும் மார்ச் 1-ம் தேதி அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த விவோ வி27 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

50எம்பி செல்பி கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமாகும் Vivo வி27 ப்ரோ.!

விவோ வி27 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Dynamic AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் சிறந்த திரை அனுபவம் கொடுக்கும். பின்பு 2,340 x 1,080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

விரைவில் அறிமுகமாகும் இந்த விவோ வி27 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் Dimenity 8200 பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது. இந்த மீடியாடெக் Dimenity 8200 பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்றே கூறலாம். பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த கேலக்ஸி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

8ஜிபி/12ஜிபி ரேம் மற்றம் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ வி27 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

50எம்பி செல்பி கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமாகும் Vivo வி27 ப்ரோ.!

அசத்தலான கேமரா

விவோ வி27 ப்ரோ ஸ்மார்ட்போன் 64எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன்
உதவியுடன் தரமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவுடன் இந்த போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன்.

பாஸ்ட் சார்ஜிங் வசதி

இந்த விவோ வி27 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இதை சார்ஜ் செய்ய பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனின் பேட்டரி நீண்ட நேரம் பேக்கப் வழங்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த புதிய போனின் வடிவமைப்புக்கு அதிக
கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

50எம்பி செல்பி கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமாகும் Vivo வி27 ப்ரோ.!

கனெக்டிவிட்டி

அதேபோல் 5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட்,3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த விவோ வி27 ப்ரோ ஸ்மார்ட்போன். அதேபோல் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo V27 Pro smartphone will be launched in India on March 1 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X