பிப்ரவரி 25-ம் தேதி வரை எந்த போனும் வாங்காதீங்க: வருகிறது சோனி கேமரா சென்சார் கொண்ட Vivo 5ஜி போன்.!
விவோ நிறுவனம் இந்திய சந்தையில் வரும் பிப்ரவரி 25-ம் தேதி புதிய விவோ வி27 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சோனி கேமரா சென்சார், தரமான சிப்செட் மற்றும் தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவரும் என்பதால் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
எனவே நீங்கள் 5ஜி போனை வாங்க திட்டமிட்டிருந்தால் இப்போதைக்கு வாங்க வேண்டாம். இந்த விவோ வி27 ப்ரோ ஸ்மார்ட்போனுக்காக காத்திருங்கள்.
மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த விவோ 27 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

விவோ வி27 ப்ரோ ஸ்மார்ட்போன் அம்சங்கள்
விரைவில் அறிமுபமாகும் விவோ வி27 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.56-இன்ச் AMOLED டிஸ்பிளே வசதியைக் கெர்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த விவோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.
விவோ வி27 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் Dimensity 1300 சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதி உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் வெளிவந்த தகவலின்படி இந்த விவோ வி27 ப்ரோ ஸ்மார்ட்போன் 64எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போன் சோனி கேமரா சென்சார் வசதியுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த விவோ வி27 ப்ரோ ஸ்மார்ட்போன்.
இந்த விவோ வி27 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4600 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 66 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி,இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், 8ஜிபி ரேம் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டு இந்த விவோ வி27 ப்ரோ
ஸ்மார்ட்போன். மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த Vivo Y56 5G ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

விவோ Y56 5ஜி அம்சங்கள்
விவோ Y56 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 2408 × 1080 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த விவோ Y56 5ஜி போன். 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ Y56 5ஜி ஸ்மார்ட்போன்.
விவோ Y56 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் சிறந்த செயல்திறன் வழங்கும். கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த உதவும் Dimensity 700 சிப்செட். பின்பு FunTouch OS சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த விவோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய விவோ 5ஜி போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய போன்.

விவோ Y56 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 18 பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புதிய போன். 5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த விவோ Y56 5ஜி ஸ்மார்ட்போன். 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ Y56 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,999-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications