அறிமுகத்திற்கு முன்பே வெளியான Vivo வி27 ப்ரோ போனின் விலை மற்றும் விவரங்கள்.!
விவோ நிறுவனம் தற்போது 5ஜி போன்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது. இந்நிலையில் வரும் மார்ச் 1-ம் தேதி இந்தியாவில் புதிய 5ஜி போன் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது விவோ.அதாவது விவோ வி27 ப்ரோ எனும் மாடலை தான் இந்நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.
என்ன விலை?
மேலும் தற்போது அறிமுகத்திற்கு முன்பே விவோ வி27 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விவரங்கள் தெரியவந்துள்ளது. அதாவது இந்தியாவில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ வி27 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.41,999-விலையிலும், இதன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் ரூ.45,999-விலையிலும் அறிமுகமாகும்.

என்னென்ன அம்சங்கள்
மேலும் இந்த புதிய போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது விவோ வி27 ப்ரோ போன் ஆனது 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Dynamic AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 2,340 x 1,080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும்.
தரமான பிராசஸர்
இந்த விவோ வி27 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் Dimenity 8200 பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த கேலக்ஸி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போனில் ஆப்ஸ்களை தடையின்றி இயக்க முடியும். அதேபோல் இந்த போன் சிறந்த கேமிங் அனுபத்தை தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ வி27 ப்ரோ ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும். பின்பு எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புதிய போன்.
விவோ வி27 ப்ரோ ஸ்மார்ட்போன் 4600 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ வி27 ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 66 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புதிய போன்.

கனெக்டிவிட்டி
அதேபோல் 5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த விவோ வி27 ப்ரோ ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

விவோ வி27 ப்ரோ ஸ்மார்ட்போன் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ வி27 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த விவோ போன்.


Click it and Unblock the Notifications