ஆபர் விலையில் Vivo V27 Pro விற்பனை.. நம்பி வாங்க 4 காரணங்கள்.. வாங்காமல் இருக்க 3 காரணங்கள்!
சமீபத்தில் அறிமுகமான விவோ வி27 ப்ரோவின் (Vivo V27 Pro) இந்திய விற்பனை இன்று முதல், அதாவது மார்ச் 6 முதல் தொடங்குகிறது. ஒருவேளை இந்த லேட்டஸ்ட் விவோ ஸ்மார்ட்போனை வாங்கலாமா? வேண்டாமா? என்கிற குழப்பம் உங்களிடம் இருந்தால்.. நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்!
ஏனென்றால் விவோ வி27 ப்ரோவின் விற்பனையின் போது அதன் மீது என்னென்ன சலுகைகள் (பேங்க் & எக்ஸ்சேன்ஜ் ஆபர்) கிடைக்கும்? இதை நம்பி வாங்கலாமா அல்லது தவிர்க்கலாமா? இதற்கு பதிலாக வேறு என்னென்ன போன்களை (Best Alternative Phones) கருத்தில் கொள்ளலாம்? போன்ற விவரங்கள் இதோ:

Vivo V27 Pro இந்திய விலை விவரங்கள்
விவோ வி27 ப்ரோ ஸ்மார்ட்போனானது மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கும். பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் விலை ரூ.37,999; 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.39,999 மற்றும் டாப்-எண்ட் வேரியன்ட் ஆன 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜின் விலை ரூ.42,999.
Vivo V27 Pro கலர் ஆப்ஷன்ஸ்
மேற்கண்ட மூன்று ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுமே நோபல் பிளாக் (Noble Black) மற்றும் மேஜிக் ப்ளூ (Magic Blue) என்கிற 2 கலர் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கும். அதில் மேஜிக் ப்ளூ வேரியண்ட் ஆனது ஃப்ளோரைடு ஏஜி கலர் சேஞ்சிங் (Fluoride AG Color-Changing Material) மெட்டீரியல் உடனான கலர் சேஞ்சிங் பேக் பேனலுடன் வருகிறது.
Vivo V27 Pro விற்பனை சலுகைகள்
ஐசிஐசிஐ வங்கி, கோடக் மற்றும் ஹெச்டிஎஃப்சி பேங்க் கார்டுகளை பயன்படுத்தினால் ரூ.3,000 வரையிலான இன்ஸ்டன்ட் பேங்க் ஆபர் கிடைக்கும். மேலும் ரூ.2,500 வரையிலான எக்ஸ்சேன்ஜ் ஆபரும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட சலுகைகள் பிளிப்கார்ட் (Flipkart) வலைதளம் வழியாக அணுக கிடைக்கும்.
இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் வழியாக மட்டுமின்றி விவோ இ-ஸ்டோர் (Vivo e-Store) வழியாகவும் வாங்க கிடைக்கும். கூடுதலாக க்ரோமா (Chroma) மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் (Reliance Digital) உள்ளிட்ட முக்கிய சில்லறை விற்பனை நிலையங்களின் வழியாகவும் விவோ வி27 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படும்.
Vivo V27 Pro நம்பி வாங்க 4 காரணங்கள்
விவோ வி27 ப்ரோவை நம்பி வாங்க 4 முக்கிய காரணங்களை முன்வைக்கலாம். ஒன்று - இது மிகவும் அழகான வடிவமைப்பை பெற்றுள்ளது; இரண்டு - இதில் அட்டகாசமான அமோஎல்இடி டிஸ்பிளே உள்ளது: மூன்று - இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி லைஃப் நன்றாக இருக்கிறது; நான்கு - இதன் கேமராக்கள் மிகவும் திறமையானதாக உள்ளன.
Vivo V27 Pro வாங்காமல் தவரிக்க 3 காரணங்கள்
குறைகளை பற்றி பேசும் போது, இந்த ஸ்மார்ட்போனின் செயல்திறன் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம்; மேலும் இதில் ப்ளோட்வேரை (Bloatware) காண முடிகிறது. கடைசியாக இதுவொரு பிரீமியம் ஸ்மார்ட்போனாக இருந்தும் கூட, இதில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் இல்லை. இந்த 3 சிறிய குறைகளில் ஏதேனும் 1 பெரிய குறையாக தோன்றினால், இந்த போனை வாங்காமல் தவிர்க்கலாம்!
Vivo V27 Pro விற்கு சிறந்த மாற்று எது?
விவோ வி 27 ப்ரோவின் நேரடி போட்டியாளர்களாக மூன்று ஸ்மார்ட்போன்களை பட்டியலிடலாம். அவைகள் ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி (OnePlus 11R 5G), ரியல்மி ஜிடி நியோ 3 (Realme GT Neo 3) மற்றும் ஐக்யூ 9டி (iQOO 9T).


Click it and Unblock the Notifications








