வாரே வா.. பல லேட்டஸ்ட் போன்களை தட்டி தூக்கும் விலையில் Vivo V27, Vivo V27 Pro அறிமுகம்.. மார்ச் 6ல் விற்பனை!
சமீபத்தில் அறிமுகமான பல லேட்டஸ்ட் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களை (Mid-range Smartphones) தட்டி தூக்கும் விலையில் விவோ நிறுவனத்தின் 2 புதிய ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நாம் இங்கே பேசுவது விவோ வி27 (Vivo V27) மற்றும் விவோ வி27 ப்ரோ (Vivo V27 Pro) மாடல்களை பற்றித்தான்!
ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஃபன்டச் ஓஎஸ் 13 (Funtouch OS 13), டாப்-எண்ட் மீடிடாடெக் (MediaTek) ப்ராசஸர்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 3டி கர்வ்டு டிஸ்பிளே, கலர் சேஞ்சிங் கிளாஸ் பேக் (Color Changing Glass Back) போன்ற பொதுவான அம்சங்களுடன் வரும் விவோ வி27 சீரீஸின் விரிவான அம்சங்கள், விலை, விற்பனை தேதி போன்ற விவரங்கள் இதோ:

Vivo V27 மற்றும் Vivo V27 Pro விரிவான அம்சங்கள்
சில முக்கிய வேறுபாடுகளை தவிர விவோ வி27 மற்றும் விவோ வி27 ப்ரோ ஆகிய இரண்டுமே "கிட்டத்தட்ட" ஒரே மாதிரியான அம்சங்களையே பேக் செய்கின்றன. டூயல் சிம் (நானோ) ஆதரவுடன் வரும் 2 இந்த போன்களுமே 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் ஃபுல்-எச்டி+ AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.
விவோ வி27 ப்ரோ மாடலனது 12ஜிபி வரையிலான ரேம் உடனான 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 8200 (MediaTek Dimensity 8200) ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. மறுகையில் உள்ள வெண்ணிலா மாடலானது மீடியாடெக் டைமன்சிட்டி 7200 5ஜி (MediaTek Dimensity 7200 5G) ப்ராசஸரால் இயக்கப்படுகிறது.
இரண்டு மாடல்களுமே ஓஐஎஸ் (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்) ஆதரவுடனான 50 மெகாபிக்சல் சோனி IMX766V மெயின் கேமரா + 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா + 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கின்றன. முன்பக்கத்தில், ஆட்டோஃபோகஸுடனான 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது
ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்களுடன் வரும் விவோ வி27 மற்றும் விவோ வி27 ப்ரோ ஆகிய இரண்டுமே 66W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடனான 4,600mAh பேட்டரியுடன் வருகின்றன. விவோ நிறுவனத்தின் கூற்றுப்படி இது வெறும் 19 நிமிடங்களில் 0 - 50 சதவிகித பேட்டரியை சார்ஜ் செய்யும் திறன் கொண்டது.
Vivo V27 Pro மற்றும் Vivo V27 இந்திய விலை
விவோ வி27 ப்ரோவின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஆப்ஷன் ரூ.37,999 க்கும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஆப்ஷன் ரூ.39,999 க்கும், 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.42,999 க்கும் வாங்க கிடைக்கும். மறுகையில் உள்ள விவோ வி27 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஆப்ஷன் ரூ.32,999 க்கும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஆப்ஷன் ரூ.36,999 க்கும் விற்பனை செய்யப்படும்.
Vivo V27, Vivo V27 Pro விற்பனை தேதி மற்றும் அறிமுக சலுகைகள்
விவோ வி27 ப்ரோ மாடலின் முன்பதிவு இன்று (மார்ச் 1) முதல் தொடங்குகிறது. இது வருகிற மார்ச் 6 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும். மறுகையில் உள்ள விவோ வி23 ஸ்மார்ட்போனின் விற்பனை மார்ச் 23 ஆம் தேதி முதல் தொடங்கும். சலுகைகளை பொறுத்தவரை, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ மற்றும் கோடாக் மஹிந்திரா வங்கிகளின் கார்டுகளை பயன்படுத்தினால் ரூ.3000 என்கிற பிளாட் ஆபர் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








