அடி தூள்: சோனி கேமரா சென்சார் வசதியுடன் களமிறங்கும் 2 புதிய விவோ போன்கள்.!
பல்வேறு நிறுவனங்கள் சோனி நிறுவனத்தின் கேமரா சென்சாரை தான் அதிகம் பயன்படுத்துகின்றன. குறிப்பாக இந்த கேமராக்கள் உதவியுடன் தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோவை எடுக்க முடியும். இந்நிலையில் விவோ நிறுவனமும் தனது புதிய விவோ போன்களில் சோனி கேமரா சென்சாரை பயன்படுத்தி உள்ளது.
விவோ வி27 மற்றும் விவோ வி27 ப்ரோ போன்கள்
அதாவது விவோ நிறுவனம் விரைவில் விவோ வி27 மற்றும் விவோ வி27 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த இரண்டு
விவோ போன்களில் தான் சோனி கேமரா சென்சாரை பயன்படுத்தி உள்ளது. மேலும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் இந்தியச் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

விவோ வி27 மற்றும் விவோ வி27 ப்ரோ அம்சங்கள்
மேலும் ஆன்லைனில் கசிந்த விவோ வி27 மற்றும் விவா வி27 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் சில முக்கிய அம்சங்களைப் பார்ப்போம். அதாவது விவோ வி27 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் Dimensity 8200 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

குறிப்பாக விவோ வி27 மற்றும் விவா வி27 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் வாட்டர் டிராப் டிஸ்பிளே, 8ஜிபி ரேம், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். தற்போது இந்த போன்களின் ஒரு சில அம்சங்கள் மட்டுமே தெரியவந்துள்ளது. கூடிய விரைவில் இந்த போன்களின் அனைத்து அம்சங்களும் தெரியவரும்.
விவோ Y35m அம்சங்கள்
மேலும் கடந்த மாதம் விவோ நிறுவனம் அறிமுகம் செய்த விவோ Y35m ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்ற விரிவாகப் பார்ப்போம்.விவோ Y35m ஸ்மார்ட்போன் ஆனது 6.51-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது.பின்பு 720 x 1600 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.
மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ Y35m ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் OriginOS Ocean சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாககொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது விவோ Y35m ஸ்மார்ட்போன்.

விவோ Y35m ஸ்மார்ட்போன் ஆனது 13எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய விவோ போன். இதுதவிர எல்டிஇ பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புதிய விவோ Y35m போன்.
விவோ Y35m ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸடோரேஜ் வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. டான் கோல்ட், ஐஸ் கிளவுட் ப்ளூ மற்றும் அப்சிடியன் பிளாக் நிறங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த விவோ Y35m ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு 15 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5ஜி, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த விவோ Y35m ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications