Home
Mobile

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் Vivo வி25இ: என்னென்ன அம்சங்கள்?

விவோ நிறுவனம் இந்தியாவில் விவோ வி25இ எனும் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவோ வி25இ

விவோ வி25இ

மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த விவோ வி25இ ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது இந்த விவோ வி25இ ஸ்மார்ட்போன் ஆனது தரமான மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த சிப்செட்-இன் செயல்திறன் மிகவும் அருமையாக இருக்கும். அதாவது சிறந்த வேகத்தை கொடுக்கும் இந்த ஹீலியோ ஜி99 சிப்செட். இதுதவிர ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த அசத்தலான விவோ போன்.

256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

இந்த புதிய விவோ வி25இ ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த விவோ போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டிகார்டு ஸ்லாட்ஆதரவு இதில் உள்ளது.

ட்ரிபிள் ரியர் கேமரா

விவோ வி25இ ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 64எம்பி பிரைமரி கேமரா ஆதரவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா ஆதரவுடன் இந்த விவோ போன் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பாஸ்ட் சார்ஜிங் வசதி

பாஸ்ட் சார்ஜிங் வசதி

அதேபோல் 4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 44 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ வி25இ ஸ்மார்ட்போன். பின்பு 3.5 எம்எம் ஆடியோ ஜாக்,யுஎஸ்பி டைப்-சிபோர்ட் போன்ற பல சிறப்பான வசதிகளுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவோ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த விவோ Y22s ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

விவோ Y22s ஸ்மார்ட்போன்

விவோ Y22s ஸ்மார்ட்போன்

விவோ Y22s ஸ்மார்ட்போன் ஆனது 6.55-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. பின்பு 720 x 1612 பிக்சல்ஸ், 20:1:19 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 530 நிட்ஸ் ப்ரைட்னஸ் போன்ற அசத்தலான அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர்

ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர்

விவோ Y22s போனில் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர் வசதி உள்ளது. எனவே ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான விவோ ஸ்மார்ட்போன்.

குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்டுள்ளது இந்த விவோ Y22s ஸ்மார்ட்போன்.

 50எம்பி பிரைமரி கேமரா

50எம்பி பிரைமரி கேமரா

விவோ Y22s ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த விவோ போன்.

  5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

விவோ Y22s ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 18 வாட்ஸ்பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர், டூயல் சிம், 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், 3.5mm ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற தரமான ஆதரவுகளை கொண்டு இந்த விவோ போன் மாடல்.

தற்போது இந்த போன் வியட்நாமில் அறிமுகம் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும்
என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Vivo V25e smartphone to launch in India at budget price soon: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X